10.ஆம் வகுப்பு தமிழ்
ஒருமதிப்பெண் வினாவங்கி
10.ஆம் வகுப்பு தமிழ் - வினாவங்கி
இயல்
– 1
1.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து
விடாது
இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது
இகழ்ந்தால்
2.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.
இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ)
எந்தம் + தமிழ் +நா
4.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
அ) பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ)
பாடல் : கேட்டவர்
5.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -
அ) குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை இ) கிளைப்பெயர் வகை ஈ)
இலைப்பெயர் வகை
இயல் – 2
6. பரிபாடல்
அடியில் விசும்பில், இசையில்' ஆகிய
சொற்கள் குறிப்பவை எவை?
அ) வானத்தையும்
பாட்டையும் ஆ) வான்வெளியில்,
பேரொலியில்
இ) வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
7. செய்தி 1- ஒவ்வோர்
ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில்
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்
தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ) செய்தி 1 மட்டும்
சரி ஆ) செய்தி 1.2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும்
சரி ஈ) செய்தி 1.3 ஆகியன சரி
8. பொருந்தும்
விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2
9. மகிழுந்து
வருமா?' என்பது -------
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
10. அறிஞகுக்கு
நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக அமைந்தது -
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
இயல்-3
11. பின்வருவனவற்றுள்
முறையான தொடர் எது?
அ) தமிழர்
பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை
இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர்
பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ)
தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
12. காலில்
அணியும் அணிகலனைக் குறிப்பது
அ) சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
13. காசிக்காண்டம்
என்பது
அ)
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ)
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
14. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன்
கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.
இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
அ) நிலத்திற்கேற்ற
விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும்
விருந்து ஈ) உற்றாரின் விருந்து.
15. நன்மொழி
என்பது
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை
இயல்-4
16.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித்
தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறன் ஆ)
கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
17. இடைக்காடனாரின்
பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்
அ) அமைச்சர்.மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன் ஈ) மன்னன், இறைவன்
18. உவப்பின்
காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது
அ) இட வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால
வழுவமைதி
19.
இரவிந்திரநாத தாகூர் ---மொழியில் எழுதிய
கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --- மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில வங்காளம்
ஆ) வங்காள, ஆங்கில இ) வங்காள, தெலுங்கு ஈ)
தெலுங்கு, ஆங்கில
20. படர்க்கைப்
பெயரைக் குறிப்பது எது?
அ) யாம் ஆ) நீவிர் இ) அவர் ஈ) நாம்
இயல்-5
21. கூற்று 1:
போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2: அவருக்குள்
இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2
தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
22. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ) கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
23. தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை
நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை
என்பது திரைப்படமா?
நாடகமா?
ஈ) யாருக்குப்
பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
24. சித்திரை,
வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ) முதுவேனில் ஆ)
பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
25. குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி,
மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம்,
நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
இயல்-6
26. சரியான
அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு, மண். ஏர்.
மாடு ஆ) மண்,
மாடு, ஏர். உழவு
இ) உழவு, ஏர்,
மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண்
27. தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
28. நச்சிலைவேல்
கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில்
குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,
அ) பாண்டிய நாடு, சேர நாடு
ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
29. இருநாட்டு
அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக்
கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை
நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்
30. 'மாலவன்
குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ) திருப்பதியும்
திருத்தணியும் ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும்
திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
இயல்-7
31. மேன்மை
தரும் அறம் என்பது-
அ) கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில்
பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி
அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது.
32. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ) உதியன்:
சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்
இ) பேகன்
கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி
33. வண்ணதாசனுக்குச்
சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறக்கல்
34. பூக்கையைக்
குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,-----
வேண்டினார்.
அ) கருணையன், எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ) கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
35. சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
1. தென்னன்
மகளே எனக் குறிப்பிடப்படுவது
அ) பாண்டியன் ஆ) தமிழ் இ) கடல் ஈ) தொல்காப்பியம்
2. பாப்பத்து
என்பது எந்த நூல் தொகுப்பைக் குறிக்கிறது?
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்
கீழ்க்கணக்கு ஈ) சிற்றிலக்கியங்கள்
3. பாடலில்
உள்ள எதுகையைத் தேர்ந்தெடுக்க
அ) தென்னன் – மகளே ஆ) தென்னன் – இன்னறும்
இ) முன்னும் –நினைவால் ஈ) மன்னும் – சிலம்பே
4 நற்கணக்கு
– இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) வேற்றுமைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
2. "உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச்
சிறகார்ந்த
அந்தும்பி
பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
1. பாடலின் ஆசிரியர்-
அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ)
பாரதிதாசன் ஈ) தமிழழகனார்
2. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.
அ) செந்தாமரை ஆ) வீசுதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
3. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ) உந்தி இ) யாண்டும் ஈ) வண்டு
4. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -
அ) உலகியல் நூறு ஆ) பாவியக் கொத்து இ) கனிச்சாறு ஈ) எண்சுவை
3. "உண்டா
யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"
1. பாடலின் ஆசிரியர் -
அ) கண்ணதாசன் ஆ) பாரதிதாசன் இ) வண்ணதாசன் ஈ) பாரதியார்
2. கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.
அ) வண்டு ஆ) காற்று இ) அன்னம் ஈ) மழை
3. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க?
அ) தருவேன், தட்டுவேன் ஆ) உண்டா, வண்டா இ) இல்லா, இல்லம் ஈ) சொல்லா, சொல்லிட
4. பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயர்---
அ) ஞானம் ஆ) காலக்கணிதம் இ) பூத்தொடுத்தல் ஈ) சித்தாளு
இயல்-2
4. "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
1. பாடல் இடம் பெற்ற நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து
2. பாடலை இயற்றியவர்-
அ) கீரந்தையார் ஆ) குலசேகராழ்வார் இ) அதிவீரராம பாண்டியர் ஈ) பெருங்கெளசிகனார்
3. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.
அ) கரு வளர் - உரு அறிவாரா ஆ) உரு அறிவாரா - உந்து வளி
இ) விசும்பில் – கருவளர் ஈ. விசும்பில் – வானத்து
4. விசும்பு என்ற சொல்லின் பொருள்-
அ) மழை ஆ) காற்று இ) வானம் ஈ) நீர்
இயல்-3
5. விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற
நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து
மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
1. பாடல் இடம்பெற்ற நூல் –
அ) கனிச்சாறு ஆ) காசிக்காண்டம் இ) பரிபாடல் ஈ) முல்லைப்பாட்டு
2. பாடலில் குறிப்பிடப்படும் எண்ணுப்பெயர்
அ) ஆறு ஆ) ஐந்து இ) ஏழு ஈ) ஒன்பது
3) செப்பல்
- இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை ஆ) தொழிற்பெயர் இ) பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
4) பாடலில்
இடம்பெற்ற மோனையைத் தேர்ந்தெடுக்க
அ)விருந்தின –திருந்து ஆ)எழுதல்
– பொருந்து இ)பொருந்து – பரிந்து
ஈ)ஒழுக்கம் - வழிபடு
6. செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு
கலந்தாடத்
திருவரை யரைஞாணரைமணி
யொடுமொளி திகழரைவடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு
வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு
முச்சிக் கதிர்த் தொடுமாட
வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத
புரிக்குக னாடுக செங்கீரை
1. பாடல் இடம்பெற்ற நூல் –
அ) கனிச்சாறு ஆ) காசிக்காண்டம் இ) பரிபாடல் ஈ) முத்துக்குமாரசாமிப்
பிள்ளைத்தமிழ்
2. பாடலின் ஆசிரியர்
அ) பாவலரேறு ஆ) சீவலமாறன் இ) குமரகுருபரர் ஈ) கீரந்தையார்
3. குண்டல மும் குழை காதும் – இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) விளித்தொடர்
4. குகன்
என்பது யாரைக்குறித்தது?
அ) குழந்தை ஆ) முருகப்பெருமான் இ) ஆசிரியர் இ) பக்தர்
இயல்-4
7. "ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."
1. பாடல் இடம் பெற்ற நூல்-
அ) பெரியபுராணம் ஆ) திருவிளையாடற்புராணம் இ) கந்தபுராணம் ஈ) பரிபாடல்
2. பாடலின் ஆசிரியர்
அ) பரஞ்சோதி முனிவர் ஆ) கம்பர் இ) சேக்கிழார் ஈ)
குலசேகராழ்வார்
3. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.
அ) ஓங்கு – பனை ஆ) நீங்குவம் –அல்லோம் இ) ஓங்கு - நீங்குவம் ஈ) நீத்து - நீயும்
4. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.
அ) ஆலவனம் ஆ) இடும்பவனம் இ)
முல்லை வனம் ஈ) கடம்பவனம்
இயல்-5
8 "வண்மை யில்லையோர்
வறுமை யின்மையாற்
றிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்
உண்மை
யில்லைபொய் யுரையி லாமையால்
வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால்"
1. பாடலின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர் ஆ) தமிழழகனார் இ) கம்பர் ஈ) இளங்கோவடிகள்
2. --------மிகுந்திருப்பதால்
கோசல நாட்டில் அறியாமை இல்லை
அ) வறுமை ஆ) கொடை இ) பொய்மொழி ஈ. கேள்வி
3. எதுகையைத் தேர்ந்தெடுக்க.
அ) உண்மை, வெண்மை ஆ) உண்மை, பொய்யுரை இ) வண்மை, வறுமை ஈ) வெண்மை, கேள்வி
4. வண்மை - பொருளைத் தேர்க.
அ) கொடை ஆ) மெய்மை இ) அறியாமை ஈ) வறுமை
இயல்-6
9. பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"
1. மோனைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும் இ) பருத்தி, காருகர் ஈ) பகர்வனர், பட்டினும்
2. காருகர் என்னும் சொல்லின் பொருள் -
அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்
3. எதுகைச் சொற்களைத் தேர்க.
அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்
4. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்
அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. திருவிளையாடற் புராணம்
10. காவல் உழவர் களத்துஅகத்துப் போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை - காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு.
1. பாடல் இடம்பெற்ற நூல்
அ) பரிபாடல் ஆ) முத்தொள்ளாயிரம் இ) சிலப்பதிகாரம் ஈ) கம்பராமாயணம்
2. கொல் யானை – இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை
3. ”கிள்ளி” என்பது யாரைக்குறிக்கும்?
அ) சேர
மன்னன் ஆ) சோழ
மன்னன் இ) பாண்டிய
மன்னன் ஈ) பல்லவ
மன்னன்
4. பாடலில் இடம்பெற்ற சீர்
மோனையைத் தேர்ந்தெடுக்க
அ) நாவலோ –
நல்யானை ஆ) நாவலோ – நாளோதை
இ) கொல்யானை – நல்யானை ஈ) காவல்
– உழவர்
இயல்-7
11."பூக்கையைக்
குவித்துப் பூவே
புரிவொடு காக்கென்று அம்பூஞ்
சேக்கையைப் பரப்பி இங்கண்
திருந்திய அறத்தை யாவும்"
1. பாடலின் ஆசிரியர் -
அ) வீரமாமுனிவர் ஆ) நாகூர் ரூமி இ) அழகிரிசாமி ஈ)
அசோகமித்திரன்
2. பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அ) கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) இரட்சண்ய யாத்திரிகம் ஈ) சீறாப்புராணம்
3. பாடலில் உள்ள எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க.
அ) பூக்கையை, புரிவொடு ஆ) சேக்கையை. திருந்திய இ) பூக்கையை, சேக்கையை ஈ) சேக்கையை, பரப்பி
4. சேக்கை என்ற சொல்லின் பொருள்
அ) உடல் ஆ) படுக்கை இ) கிளை ஈ) இளம்பயிர்
(மீத்திற மாணவருக்கான கூடுதல் வினாக்களைப் பெற)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி