9.ஆம் வகுப்பு தமிழ் கட்டுரை, கடிதங்கள்

9.ஆம் வகுப்பு தமிழ் - கட்டுரை , கடிதங்கள்

இயல்-1

1. உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                         

                                                                   திருத்தணி,
                                                                                                                      09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளைஅறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                                                                                                                                                          முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

2. உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்  (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை வடிவமைக்க,

தமிழ் இலக்கிய மன்றம்

அரசு மேனிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்

உலகத் தாய்மொழி நாள் விழா 

நிகழ்ச்சி நிரல்:

v நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

v தமிழ்த்தாய் வாழ்த்து : இலக்கியமன்ற உறுப்பினர்கள் (மாணவிகள்)

v வரவேற்புரை : மூ.வேல்முருகன் (மாணவர் செயலர்)

v தலைமையுரை : .எழலமுதன் , தலைமை ஆசிரியர்

v முன்னிலை : முனைவர் கா.எழில்வாணன் , தமிழாசிரியர்

v சிறப்புரை : முனைவர் திரு. நிறைமதி , தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி, சென்னை

v நன்றியுரை : செ. பூவிழி, 9.ஆம் வகுப்பு மாணவி

இயல்-2

3. சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

"சுத்தம் சோறு போடும்"

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு"

"கூழானாலும் குறித்துக் குடி"

        என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

                                                                                                                                    நன்றி.

                                                                                                                                  இவண்,

இரா மணிமாறன்,

(மாணவர் செயலர்)

இயல்-3

4. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

தமிழ் இலக்கிய மன்ற விழா

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023

      இராணிப்பேட்டை மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு  தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் .

      தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

     சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

      நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.

இயல்-4

4. பதிப்பகத்தாருக்குக் கடிதம்

 

தணிகைப்போளூர்,

                                                                                                                                    27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        12. ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

     வணக்கம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ளஅருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                           தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                         .இளவேந்தன்,

                                                                                                                   (மாணவச் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

இயல்-6

5.”எனது பயணம் எனும் தலைப்பில் உங்களது பயண அனுபவங்களை வருணித்து எழுதுக.

இயற்கையின் தாய்மடி-  உதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன். அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து, உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது. மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம். மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

6. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக: முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                               

      இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

நயம் பாராட்டுக:

1.  விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்

    விண்ணோங்கு பெருமலையில், பள்ளத்தாக்கில்

    பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்

    புல்வெளியில், நல்வயலில், விலங்கில், புள்ளில்

    தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்

    தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,

    அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்

    அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே!

                                                                                         -  ம.இலெ. தங்கப்பா

திரண்ட கருத்து:

       பரந்து விரிந்து இருக்கின்ற நெடிய வானத்திலும், பரந்த கடற்பரப்பிலும், விண்ணைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் உயரமான மலையிலும், பள்ளத்தாக்குகளில் பொழிகின்ற நீரருவியிலும், காடுகளிலும், புல்வெளிகளிலும், பசுமையான வயல்களிலும், விலங்குகளிலும், பறவைகளிலும் மட்டுமின்றி கண்ணிய தெரிகின்ற பொருட்களிலெல்லாம் நிறைந்து மனதில் தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மையான ஊற்றே, அழகு என்னும் ஒழுங்காய் அமைந்த பேரோவியமே, மெய்யே, மக்கள் மனதிலும் நீ குடியிருக்க வேண்டுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

மையக் கருத்து :

     இயற்கையின் சிறப்பையும், வளத்தையும், அழகையும் மக்களின் உள்ளத்தில் குடியிருக்கவேண்டும் எனக் கவிஞர் கூறுகிறார்.

மோனை நயம் :

     அடியிலோ, சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.

    (எ.கா) விரிகின்ற- வின்னோங்கு

              பொழிகின்ற-புல்வெளியில்,

              தெரிகின்ற - தெவிட்டாத

எதுகை நயம் :

     அடிகளிலோ, சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை  ஆகும்.   

    (எ.கா) புல் வெளியில் - நல் வயலில்

இயைபு நயம் :

      அடிகளிலோ, சீர்களிலோ கடைசி எழுத்தோ, சொல்லோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபுத் தொடை.

      (எ.கா) வானில், கடற்பரப்பில், பள்ளத்தாக்கில், காட்டில், புள்ளில், நெஞ்சில்

அணி நயம்:

    உள்ளதை உள்ளவாறு இயல்பாகக் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.

    (எ.கா) இப்பாடலில் ஆசிரியர் இயற்கை அழகு எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை உள்ளதை உள்ளவாறு கூறியுள்ளார்.

2. கல்லும் மலையும் குதித்துவந்தேன்பெருங்
               காடும் செடியும் கடந்துவந்தேன்;
   எல்லை விரிந்த சமவெளிஎங்கும்நான்
              இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
   ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்பல
              ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
   ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்மணல்
               ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.               – கவிமணி

திரண்ட கருத்து :

இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மோனை நயம் :   

சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :     ஏறாதஏறி
                   ஊறாதஊற்றிலும்

                  ஓடைகள்ஓடி வந்தேன்.

எதுகை நயம் :  

      அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.

     சான்று :    கல்லும் …. எல்லை     ஏறாத …… ஊறாத

இயைபு நயம்

       இச்செய்யுளின் ஈற்றடிகளில்தேன் தேன்என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

சொல் நயம்

இப்பாடல் பின்வரும் சொற்களைப் பெற்று சொல்நயம் மிக்கதாக உள்ளது

§  குதித்து வந்தேன்

§  கடந்து வந்தேன்

§  தவழ்ந்து வந்தேன்

§  ஏறி வந்தேன்

3. திங்கள்முடி சூடுமலை
            தென்றல் விளை யாடுமலை
       தங்குமுகில் சூழுமலை
             தமிழ்முனிவன் வாழுமலை
       அங்கயற்கண் அம்மை திரு
              அருள்சுரந்து பொழிவதெனப்
        பொங்கருவி தூங்குமலை
               பொதியமலை என்மலையே   -   குமரகுருபரர்.

திரண்ட கருத்து:

நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை. அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மோனை நயம்:  

செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:     ங்கு முகில்       –   மிழ் முனி
                அங்கயற்கண்ணி – ருள் சுரந்து

எதுகை நயம்:  

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:         திங்கள்    –  ங்கு
                     ங்கயற் –  பொங்கருவி

அணி நயம்:   

        பொதிகை மலையில் விழும் அருவிஅங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:
      அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:   

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.

சான்று:         சூடு மலை, யாடு மலை, வாழு மலை

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை