9 TH STD TAMIL FIRST MID TERM QUESTION PAPERS AND ANSWER KEY

 முதல் இடைப்பருவத்தேர்வு 2025

இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் 

9.ஆம் வகுப்பு - தமிழ் 

வினாத்தாளைப் பதிவிறக்க

விடைக்குறிப்புகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          7X1=7

வி. எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

) சிற்றிலக்கியம்

1

2.     

இ) மோனை, எதுகை, இயைபு

1

3.     

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

4.     

ஆ) பிப்ரவரி 21

1

5.     

) புலரி

1

6.     

இ) வளம்

1

7.     

அ) எட்டுத்தொகை

1

                                                                                  

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி                                                                       4X2=8

8

அ) அளபெடை எத்தனை வகைப்படும்? ஆ) நீரின்று அமையாது உலகு என்று கூறியவர் யார்?

2

9

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

2

10

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு

2

11

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை

2

12

மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

2

13

அ) இளமையி கல்வி முதுமையில் இன்பம்   ஆ) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

2

 

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்க                                                             4X3=12

14

·        முத்தமிழாய் பிறந்தது

·        மூன்று பாவினங்களால் வளர்ந்தது

·        சிற்றிலக்கியங்களைத் தந்தது

·        தெளிந்த அறிவினால் முத்திக் கனியைத் தந்தது

·        நாளும் நலமுடன் வளர்ந்தது

3

15

·        மூன்று -  தமிழ்

·        மூணுமலையாளம்

·        மூடு தெலுங்கு

·        மூருகன்னடம்

·        மூஜி -  துளு

3

16

·        நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

·        நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3

17

அ) ஆற்றங்கரையோரம் - ஆறு / கரை ஓரம்

அ) கடையெழுவள்ளல்கள்   -   கடை / எழு / வள்ளல்

இ) எட்டுக்கால்பூச்சி - எட்டு / கால் / பூச்சி

 

3

18

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்

 

             

                                                                         பகுதி-4                                                            

19

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                 09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
      முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                      

                                                                                                                                         முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

ஆ) அனுப்புநர், பெறுநர், விளித்தல், பொருள்,கடிதச்செய்தி,இப்படிக்கு,இடம்,நாள் என்ற அமைப்பில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

5

20

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

5

21

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

22

அ) சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்.

ஆ) அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும்.

5

விரிவான  விடையளிக்க                                                                                                              1X8=8

24

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

8

முன்னுரை :
            நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “தண்ணீர்சிறுகதை சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே? :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

 பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்

 

 

 

 

 

You have to wait 10 seconds.

Download Timer

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை