6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST WEEK-1

  6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 28-07-2025 முதல்  01-08-2025    

மாதம்          ஆகஸ்டு       

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  : ஆறாம் வகுப்பு          

 பாடம்    :    தமிழ்   

தலைப்பு: கல்வியைப்போற்று

1.கற்றல் நோக்கங்கள்   :

        Ø கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

           Ø  கல்வியால் உயர்ந்தவர்கள் பெயர் சிலவற்றைக் குறிப்பிடுக என்று கூறி மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.படித்தல்  :             

  • செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :



6.தொகுத்தலும்,வழங்குதலும்:
    #  அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி,அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம்சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. செய்குத்தம்பி பாவலர் எம்மாவட்டத்தில் பிறந்தார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. கல்வி ஏன் அவசியம்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குக

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் முழக்கத்தொடர்களை தொகுத்துவரச் செய்தல்.

12.கற்றல் விளைவு

Ø 602- செய்யுள் உணர்த்தும் கல்வி சார்ந்த கருத்துகளை அறிந்து சுவைத்தல்,

இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு உணர்ந்து பேசுதல்எழுதுதல்.

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை