10.ஆம் வகுப்பு தமிழ் - படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள்

 10.ஆம் வகுப்பு தமிழ்  

படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள்

1. 22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.

2. கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

  தந்தை பெயர்: பிறைசூடன், மாணவர் பெயர்: செந்தூரன், முகவரி: 32 தேர் வீதி, எழில் நகர், மதுரை-1. சேர விரும்பும் விளையாட்டு: சிலம்பாட்டம்.

3. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி திருத்தணி பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார். அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

4. மதிவதனியின் தந்தை பொற்கோ தனது மகளை தமிழாய்வுக்கூடம் ஒன்றில் தமிழ் தட்டச்சர் பணிக்காகச் சேர்க்க உள்ளார். அவருக்கு தன்விவரப் படிவத்தை நிரப்பித் தருக

5. பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன், அரக்கோணம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் செல்ல உள்ளார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக.

6. விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

7. 15, கோயில் தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு, தமிழ் வ்ழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

8. த.நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு, வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,.வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை