10.ஆம்வகுப்பு-தமிழ்-ஒரு மதிப்பெண் வினாவங்கி
இயல்-3
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பின்வருவனவற்றுள்
முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில்
தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப்
பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை
இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர்
வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
2. காலில் அணியும்
அணிகலனைக் குறிப்பது
அ) சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
3. காசிக்காண்டம்
என்பது
அ) காசி
நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி
நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) கரசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
4. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன்
கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு.
இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து.
5. நன்மொழி என்பது
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை
6) பின் குறிப்பிட்டவருள்
யாரை விருந்தினர் என அழைப்பது மிகப்பொருந்தும்?
அ) முன்பின் அறியாதவர் ஆ) உறவினர் இ) நண்பர்கள் ஈ) உற்றார்
7)’ விருந்தே புதுமை’
என்று விருந்தினருக்கு விளக்கமளித்தவர்
அ) அதிவீரராம பாண்டியன் ஆ) ஒட்டக்கூத்தர் இ) நப்பூதனார் ஈ) தொல்காப்பியர்
8)’மோப்பக் குழையும்
அனிச்சம்’ –என்ற குறள் எடுத்துரைப்பது
அ) அனிச்சம் ஆ) மோப்பம் இ) விருந்தோம்பல் ஈ) கொல்லாமை
9) ’விருந்தெதிர் கோடலும்
இழந்த என்னை’ என்று வருந்தியவள்----------
அ) ஆதிரை ஆ) கண்ணகி இ) மாதவி ஈ) காயசண்டிகை
10) கல்வியும் செல்வமும்
பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறியவர்---
அ) கம்பர் ஆ) ஒட்டக்கூத்தர் இ) இளங்கோவடிகள் ஈ) பாரதியார்
11) ’விருந்தினரும்
வறியவரும் நெருங்கியுண்ண
மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல’
என்று செயங்கொண்டார் குறிப்பிடுவது
அ) மேலோர் ஆ) முகமலர்ச்சி இ) வரவேற்றல் ஈ) பணிவிடை
12) செயங்கொண்டார் எழுதிய
நூல்
அ) தக்கயாகப்பரணி ஆ)பெத்தலகேம்
குறவஞ்சி
இ) கலிங்கத்துப்பரணி ஈ) மோகவதைப்பரணி
13) உலகம் நிலைத்திருப்பதன்
காரணமாகப் புறநானூறு கூறுவதைத் தேர்ந்தெடுக்க.
அ) உணவிடுதல் ஆ) உண்ணாமை இ) அறம்புரிதல் ஈ) தனித்து
உண்ணாமை
14) ’அல்லிலாயினும்
விருந்து வரின் உவக்கும்’ என்று கூறும் நூல்
அ) கலித்தொகை ஆ) நற்றிணை இ) மதுரைக்காஞ்சி ஈ) பட்டினப்பாலை
15) ’குரல் உணங்கு விதைத்
தினை உரல்வாய்ப் பெய்து’ இவ்வடியில் புறநானூறு குறிப்பிடும்
பண்பு--
அ) தனித்துண்ணார் ஆ) அல்லிலாயினும்
இ) இன்மையிலும் விருந்தோம்பல் ஈ) முகமலர்ச்சி
16) தலைவன் தனது கருங்கோட்டுச்
சீரியாழைப் பணையம் வைத்து விருந்தளித்த செய்தி இடம்பெறும் நூல்
அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) கலித்தொகை ஈ) பரிபாடல்
17) விருந்தளிக்கத் தானியமில்லாத்தால்
விதைத்து விட்டு வந்த விதைநெல்லை அரித்து வந்து விருந்து படைத்தவர்-----------.இச்செய்தியைக் குறிப்பிடும் நூல்-----------
அ) மாறவர்மன்,அகநானூறு ஆ) ஏனாதிநாயனார்,கலித்தொகை
இ) இளையான்குடி மாறநாயனார்,பெரியபுராணம் ஈ) சுந்தரர்,திருவருட்பா.
18) நெய்தல் நிலத்திற்கேற்ற
உணவு வகையைத் தேர்ந்தெடுக்க
அ) இறடிப்பொம்மல் ஆ) குழல்மீன்
கறி இ) வழுதுணங்காய் வாட்டு ஈ) கானத்துவையல்
19)’மருந்தே ஆயினும்
விருந்தொடு உண்’ என்று குறிப்பிடும் நூல்---.குறிப்பிடுபவர்----
அ) குறிஞ்சிப்பாட்டு,கபிலர் ஆ)
உலகநீதி,உலகநாதர்
இ) பரணர்,புறநானூறு ஈ) கொன்றைவேந்தன்,ஔவையார்
20) கூற்று:விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின.
காரணம் : கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினரை அழைத்து உணவிடுவது பெருகியது.
அ) கூற்று,காரணம் சரி ஆ)
கூற்று சரி,காரணம் தவறு
இ) கூற்று தவறு,காரணம் சரி ஈ)
கூற்று,காரணம் தவறு
21) தமிழர் வீடுகளின் முன்புறம்
திண்ணையும்,அதில் திண்டும் வைத்துக் கட்டியதன் காரணம்
அ) புதிதாக வருவோர் இரவில்
தங்குவதற்கு ஆ)
சிறுவர்கள் அமர்ந்து விளையாட
இ) வீட்டின் அழகுக்காக ஈ) விழாக்கால
பயன்பாட்டிற்காக
22) அமெரிக்காவின் மின்னசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடி
வரும் விழா
அ) தமிழர் பண்பாட்டு விழா
ஆ) தமிழர் கலைவிழா
இ) வாழையிலை விருந்து விழா ஈ) சமபந்தி
23)’இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறக்கள் கூடி இரையுண்ணும்’ என்னும் பாடலில் பாரதிதாசன்
குறிப்பிடுவது
அ) உண்ணுதல் ஆ) பகிர்ந்துண்ணல் இ) விருந்தோம்பல் ஈ) விருந்தினர்
24)’காலின் ஏழடிப்பின்
சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் முறையைக்
குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல் ஆ) காசிக்காண்டம் இ) நற்றிணை ஈ) பொருநராற்றுப்படை
25) திருக்குறளில் விருந்தோம்பல்
அதிகாரம் இடம் பெற்ற இயல்
அ) இல்லறவியல் ஆ) பாயிரவியல் இ) அரசியல் ஈ) துறவறவியல்
26) பொருத்துக
1) விருந்தே புதுமை - அ)திருவள்ளுவர்
2) மோப்பக் குழையும் அனிச்சம் - ஆ)தொல்காப்பியர்
3) மருந்தே ஆயினும் விருந்தொடு
உண் - இ)இளங்கோவடிகள்
4) விருந்தெதிர் கோடலும்
இழந்த என்னை - ஈ)ஔவையார்
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-ஈ
2-அ 3-ஆ 4-இ
இ) 1-ஆ 2-அ 3-இ 4-இ ஈ) 1-அ
2-இ 3-ஆ 4-ஈ
27) விருந்தோம்பல் பற்றிய
17-ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம் ஆ) மதுரை இ) மாமல்லபுரம் ஈ) திருச்சி
28) ஒருவரை நலம் வினவிக்
கூறும் விருந்தோம்பல் சொற்கள்---------எனப்படும்
அ) நன்மொழி ஆ) வாய்ச்சொல் இ) முகமன் ஈ) நல்லுரை
29) முத்துக்குளிக்கும்
நகரம்---------
அ) வஞ்சி ஆ) பூம்புகார் இ) கொற்கை ஈ) மதுரை
30) அதிவீரராம பாண்டியன்
எழுதாத நூலைத் தேர்ந்தெடு
அ) நறுந்தொகை ஆ) வெற்றிவேற்கை இ) குறுந்தொகை ஈ) காசிக்காண்டம்
31) அதிவீரராம பாண்டியனின்
பட்டப் பெயர்---------
அ) கோவலமாறன் ஆ) சீவலமாறன் இ) தென்னவன் ஈ) கோக்கோதை
32) திருக்கருவை அந்தாதி
எனும் நூலின் ஆசிரியர்
அ) கோவலமாறன் ஆ)சண்பகப்பாண்டியன் இ)பெருங்கிள்ளி ஈ) அதிவீரராமபாண்டியன்
33)’முகம் கடுத்து இடுவராயின்
கப்பிய பசியினொடு கடும்பசி ஆகும்’
என்று விருந்தளிப்பவரின் முகமலர்ச்சியைக் கூறும் நூல்---
அ) விவேகசிந்தாமணி ஆ) காசிக்காண்டம் இ) பொருநராற்றுப்படை ஈ) பெரியபுராணம்
34) முத்துக்குமாரசாமி
பிள்ளைத் தமிழை இயற்றியவர்---------
அ) குமரகுருபரர் ஆ)
முத்துக்குமாரசாமி இ) ஒட்டக்கூத்தர் ஈ) தமிழழகனார்
35) பண்டி என்ற சொல்லின் பொருள்
அ) நெற்றி ஆ)
கழுத்து இ) வயிறு ஈ)
தொண்டை
36) காதுமசைந்தாட எனும் சொல்லை பிரிக்கும் முறை
அ) காது+மசைந்தாட ஆ)காதும்+அசைந்தாட இ)காதுமசை+ஆட ஈ)காதும்+அசைந்து+ஆட
37) பிள்ளைத்தமிழ்--------
வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
அ)108 ஆ)96 இ)133 ஈ)81
38) சரியானவற்றை பொருத்துக
அ)சிலம்பு
- 1. காது
ஆ) அரைநாண் - 2. நெற்றி
இ)சுட்டி
- 3. இடை
ஈ) குழை -
4.கால்
அ) 1 2 3 4 ஆ) 4 2 3 1 இ) 4 1 3 2 ஈ) 4 3 2 1
39) பிள்ளைத்தமிழ்-------
பருவங்களை உடையது
அ) 12 ஆ) 20 இ ) 10 ஈ) 30
40) பிள்ளைத் தமிழில் ஒரு
பருவத்துக்கு------- பாடல்கள் பாடப்படும்
அ) 10 ஆ) 20 இ) 30 ஈ) 100
41) பிள்ளைத்தமிழ் எத்தனை
பாடல்களால் பாடப்படும்?
அ) 120 ஆ) 100 இ) 1330 ஈ)
200
42) பிள்ளைத்தமிழ்--------வகைப்படும்
அ) நான்கு ஆ)
ஐந்து இ) ஆறு ஈ) இரண்டு
43) குமரகுருபரரின்
காலம்---------- நூற்றாண்டு
அ) பதினைந்தாம் ஆ)
பதினாறாம் இ) பதினேழாம் ஈ)
பன்னிரண்டாம்
44)ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய
பருவங்கள்
அ) சிற்றில், சிறுபறை, சிறுதேர்
ஆ) கழங்கு, அம்மானை, ஊசல்
இ) சிறுதேர், கழங்கு, அம்மானை ஈ) காப்பு,
செங்கீரை, தாள்
45) பிள்ளைத்தமிழில்
இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
அ) 5 ஆ)
7 இ) 8 ஈ) 10
46) செங்கீரைப் பருவத்தில் குரிய
காலம்-------- மாதங்கள்
அ) 7 - 8 ஆ) 4 - 6 இ) 5 - 6 ஈ) 8 - 9
47) குழந்தை இரு கை ஊன்றி, ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை நீட்டி
தலைநிமிர்ந்தும், முகம் அசைந்தும் ஆடுவது---------- பருவம்
அ) வருகைப் பருவம் ஆ) அம்புலிப் பருவம் இ) முத்தப் பருவம்
ஈ) செங்கீரைப் பருவம்
48) தொகைநிலைத்தொடர்----------வகைப்படும்.
அ) ஐந்து ஆ) ஏழு இ) ஒன்பது ஈ) ஆறு
49) பனிக்கடல் என்பதன்
இலக்கணக் குறிப்பு
அ) உவமைத்தொகை ஆ) தொகையுவமை இ) உருவகம் ஈ) வேற்றுமைத்தொகை
50) வேற்றுமை உருபும்,பயனும் உடந்தொக்க தொகையைக் கண்டுபிடி
அ) பள்ளி செல் ஆ) மக்கள்
தொண்டு இ) செய்தொழில் ஈ) தைத்திங்கள்
51) காலம் கரந்த பெயரெச்சமே---------ஆகும்.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்
52) எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல் என்னும்
நான்கு அளவுப்பெயர்களைத் தொடர்ந்து வருவது------
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை இ) அளவைப்பெயர் ஈ) உவமைத்தொகை
53) மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெற்ற பொதுப்பெயர்கள்
அ) மார்கழி,சாரை ஆ)
திங்கள்,பாம்பு இ) மார்கழி,பாம்பு ஈ)
திங்கள்,சாரை
54) செங்காந்தள் என்ற தொகைச்சொல்லில்
மறைந்து வரும் உருபு
அ) ஆன ஆ) ஆகிய இ) போன்ற ஈ) ஐ
55) முறுக்குமீசை வந்தார்
என்பது------------தொகை
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
56) இருபெயரொட்டுப் பண்புத்தொகையில்---பெயர் முன்னும்,---பெயர் பின்னும் வரும்.
அ) பொது,சிறப்பு ஆ)
இடுகுறி,காரணம் இ) காரணம்,இடுகுறி ஈ)
சிறப்பு,பொது
57) வேற்றுமைத்தொகை--------வகைப்படும்.
அ) 6 ஆ) 7 இ) 8 ஈ) 9
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி