முதல்
இடைப்பருவத்தேர்வு-மாதிரி
வினாத்தாள்-3
10.ஆம்
வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள்
பகுதி-1
(மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத்
தேர்ந்தெடுக்க: 15X1=15
1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3) பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்
இ)
வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும்
பேரொலியையும்
4) கேட்டவர்மகிழப்பாடியபாடல்-இத்தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும்முறையே அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
அ) பாண்டியன்
ஆ) சேரன்
இ) சோழன்
ஈ) பல்லவன்
6) காலில்
அணியும் அணிகலனைக் குறிப்பது
அ)
சுட்டி
ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
7) நன்மொழி
என்பது
அ)
பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை
8) காசிக்காண்டம்
என்பது
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி
நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி
நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
9) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் - பொருளை வேறுபடுத்தக் காரணம்
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
10) காசிக்காண்டம் என்பது
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி
நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி
நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
11)
வெண்டைக்காய்ப்
பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும். அடிக்கோடிட்டன
----தொகைகள்
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) வேற்றுமைத்தொகை
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தென்னன்
மகளே! திருக்குறளின்
மாண்புகழே!
இன்னறும்
பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ்
சிலம்பே! மணிமேகலை
வடிவே!
முன்னும்
நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
12) இப்பாடலில்
தென்னன் என்பது யாரைக் குறித்தது?
அ) சோழன் ஆ) பாண்டியன்
இ) சேரன் ஈ) பல்லவன்
13) மகளே
என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) பெயரெச்சத்
தொடர் இ) விளித்தொடர்
ஈ) எண்ணும்மை
14) நற்கணக்கே
-பிரித்து எழுதுக
அ) நற்+கணக்கே ஆ) நல்+கணக்கே இ) நல்க்+கணக்கே ஈ) நல்ல+கணக்கே
15) எதுகை நயத்தைத் தேர்ந்தெடு
அ) தென்னன்-இன்னறு ஆ) தென்னன்- மகளே இ) மன்னும்-சிலம்பே ஈ) முடி-மணி
பகுதி-2
(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) திருமூலர் திருமந்திரத்தை இயற்றினார்.
ஆ) மூசு என்பது பலாப்பிஞ்சைக் குறிக்கும்.
17) சொல்வளத்தை
உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக
18) மென்மையான
மேகங்கள்,
துணிச்சலும்
கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
19) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை
எழுதுக.
20) செங்கீரை
ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குறிப்பிடுகிறது?
21) ”பல்லார்” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல்
எழுதுக.
பிரிவு-2
5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
23) சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு,
செய்,மேகலை,வான்,பொன்,பூ
24)
முகிழ்த்த-பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
25)
கலைச்சொல்
தருக: VOWEL , HOMOGRAPH.
26)
சொல்லைக்
கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
நாலெழுத்தில் கண் சிமிட்டும்.
கடையிரண்டில்
நீந்திச் செல்லும்.
27)
“எழுது
என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என அடுக்குத்
தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
28)
இரு
சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க . விடு-
வீடு
பகுதி-3
(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)
புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை
ஐந்தின் பெயர்களை எழுதுக.
30) உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,
இலக்கியத்தில் நான், முந்நீர்நாவாய் ஓட்டியாக
நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப்பற்றிப்பேசினால்….. உங்களுடைய
கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
31)
பத்தியைப்
படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து
சென்றன.புவி
உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது.
பின்னர்ப்
புவி குளிரும்படியாகத்
தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு
தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி
மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக
( வெள்ளத்தில்
மூழ்குதல்
) நடந்த
இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள்
வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள்
தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1.
பத்தியில்
உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2.
புவி
ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3.
பெய்த
மழை
– இத்தொடரை
வினைத்தொகையாக மாற்றுக.
பிரிவு-2
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய
வினா)
32)
தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33) உயிர்கள்
உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக்
குறிப்பிடுக.
34) அ)
அன்னை
மொழியே---எனத்தொடங்கி
---பேரரசே
என முடியும் பாடலை எழுதுக.
(அல்லது)
ஆ) ”மாற்றம்” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக
பிரிவு-3
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35) வேலொடு
நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு - குறளில்
பயின்றுவரும் அணியை விளக்குக.
36)
அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது,
தெரிந்தது, தெரியாதது, பிறந்தது,
பிறவாதது' இவை
அனைத்தையும் யாம் அறிவோம்.அதுபற்றி உமது அறிவுரை
எமக்குத்தேவை இல்லை.எல்லாம்
எமக்குத் தெரியும். வினை முற்றுகளைத்
தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக
37)
தொகாநிலைத்
தொடர் வகைகளைப் பட்டியலிடுக.
பகுதி-4
(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25 38) அ)மனோன்மணியம்
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின்
தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
(அல்லது)
ஆ)
முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச்செய்திகளை விவரித்து
எழுதுக.
39)
அ)
மாநில
அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)
ஆ) உணவு
விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலை
கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக்கடிதம்
எழுதுக.
40) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41)
22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள்
கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில்
சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை
நிரப்புக.
42.
அ)
புயல்
அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காற்றும் வகையில் செய்யும்
செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக
(அல்லது)
ஆ)
மொழி
பெயர்க்க:
1.
If you talk to a man in a language he understand,thats goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mendela
2.
Language is the road map of a culture. It tells you where its people come from
and where they are going – Rita Mae Brown
பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43) அ)
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர்
வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த
விருந்தோம்பலை அழகுற விவரிக்க.
44)
அ)
அன்னமய்யா
என்ற பெயர் பொருத்தமுடையது என நிறுவுக.
(அல்லது)
ஆ)
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன
?
45) அ) காற்று
பேசியதைப்போல , நிலம்
பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
(அல்லது)
ஆ) குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக்
கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய்
என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,கலம்பகம்
கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,கோவை யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர்
சபுலவர்கள்.
இக்கருத்தைக் கருவாக் கொண்டு
‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை
எழுதுக.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி