9. ஆம் வகுப்பு - தமிழ் வினாவிடைகள்
9.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
இயல்-1
திறன் அறிவோம்பலவுள்
தெரிக
1.
திணை, பால், எண்
ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?
அ) தமிழ் ஆ) தெலுங்கு இ) மலையாளம் ஈ) கள்ளடம்
2.
தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய
வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்
3.
பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில் கூவியது ஆ) கொக்கரக்கோ எனச் சேவல்
கூவியது.
இ) அண்ணா.அ என அழைத்தான் (ஈ) ஓடி வா ஓடி வா
4.
"காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும்
தமிழே!'இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -
அ) முரண்,
எதுகை, இரட்டைத் தொடை ஆ) இயைபு, அளபெடை,
செந்தொடை
இ) மோனை, எதுகை,
இயைபு ஈ) மோனை, முரண், அந்தாதி
5.
சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) வேற்றுமைத்தொகை ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம்
இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகை
குறுவினா
1.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
விடை: திராவிட மொழிக்குடும்பம்
2.
தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து
எழுதுக.
விடை:
''காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும்
தமிழே!"
3.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
விடை: இரண்டிரண்டு அடிகளில்
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
4.
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை
அமைந்ததைச் சொல்லும்
இலக்கணங்கள் - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?
·
மக்கள்
வாழ்வு அகம்,புறம் எனப் பிரிக்கப்பட்டது
·
இலக்கிய
விதிகளைப் பற்றி இலக்கண நூல்கள் கூறின.
5.
தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.
விடை: தமிழ்,
மலையாளம், கன்னடம், குடகு,
துளு
6.
அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
·
அளபெடை
இரண்டு வகைப்படும்.
·
அவை: உயிரளபெடை,
ஒற்றளபெடை.
சிறுவினா
1.
தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.
·
முத்தமிழாய்
பிறந்தது
·
மூன்று
பாவினங்களால் வளர்ந்தது
·
சிற்றிலக்கியங்களைத்
தந்தது
·
தெளிந்த
அறிவினால் முத்திக் கனியைத் தந்தது
·
நாளும்
நலமுடன் வளர்ந்தது
2. திராவிட
மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த
மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
·
திராவிட
மொழிகளைத் தென் திராவிட மொழிகள்,
நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என
மூன்றாகப் பிரிப்பர்.
·
அவற்றுள்
சிறந்த மொழிகள் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், துளு,
குடகு, கூவி (குவி). கோண்டா போன்றவை.
தமிழ்: தொன்மையும்
இலக்கிய இலக்கண வளமும் உடைய மொழி
தெலுங்கு : தேன் போன்ற இனிய
மொழி
மலையாளம் : தமிழோடு ஒத்த
இனமொழி என்பர்
3.
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு
இடம்பெற்றுள்ளது?
விடை:
1. மூன்று - தமிழ்
2. மூணு – மலையாளம்
3. மூடு – தெலுங்கு
4. மூரு – கன்னடம்
5. மூஜி - துளு
4.
"புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்" - உங்கள்
பங்கினைக் குறிப்பிடுக.
·
புதுப்பொலிவுடன்
தமிழ் வளர்ப்பேன்.
·
மொழிபெயர்ப்புகளை
நிறைய செய்வேன்
·
அறிவியல்
தமிழாய், கணினித் தமிழாய் புதுவடிவில் வளர்த்தெடுப்பேன்.
நெடுவினா
1.
காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள்
பற்றி எழுதுக
ü
தமிழ்
மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.
ü
தமிழ்
மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.
ü
திராவிட
மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.
ü
பிற
திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.
ü
ஒரே
பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.
ü
இந்திய
நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.
ü
இவ்வாறு
தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ்
மொழி விளங்குகிறது
2.
புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம்
பாதிப்புத் தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
முன்னுரை:
ஆறாம் திணை என்ற சிறுகதை
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை ஆ
முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இலங்கைக்குப்
புலம்பெயர்தல்:
ஆசிரியரது குடும்பம்
இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு கலவரம் வளர
தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை கலவரத்திலிருந்து
பாதுகாத்தது
அகதிகளாக
இருந்த அவலம்:
அங்கிருந்த பல தமிழ்
குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு நிறுவனம்
அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல
நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது
புலம்பெயர்தலின்
பாதிப்புகள்:
புலம் பெயர்ந்தவர்கள்
தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல் தன்னுடைய தாய்
நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
முடிவுரை: புலம்பெயர்ந்தவர்கள்
தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக மாற்றங்களாலும்
மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற
புற மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை மிக ஆழமாக
விளக்குகிறது.
மொழியை
ஆள்வோம்
மொழிபெயர்க்க.
1.
Linguistics - மொழி ஆராய்ச்சி
2.
Literature - இலக்கியம்
3.
Philologist - மொழி ஆராய்ச்சியாளர்
4. Polyglot -
பன்மொழியாளர்கள்
5. Phonologist
- ஒலியனியல் வல்லுநர்
6. Phonetics - ஒலிப்பியல்
அடைப்புக்குள்
உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட
இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் திகழ்கிறது.
(திகழ்)
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் கலந்துகொள்வாள்.
(கலந்துகொள்)
3. உலகில் மூவாயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. (பேசு)
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலாச் சென்றனர். (செல்)
5. தவறுகளைத் திருத்துவேன். (திருத்து)
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:
த/பெ மதியரசன்,
1/3, தெற்குமாட
வீதி,
மதுரை.
உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை வடிவமைக்க
தமிழ் இலக்கிய மன்றம்
அரசு மேனிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்
உலகத் தாய்மொழி நாள் விழா
நிகழ்ச்சி நிரல்:
v
நாள் :
11-09-2023 , திங்கட்கிழமை
v
தமிழ்த்தாய் வாழ்த்து : இலக்கியமன்ற உறுப்பினர்கள் (மாணவிகள்)
v
வரவேற்புரை : மூ.வேல்முருகன் (மாணவர் செயலர்)
v
தலைமையுரை : ம.எழலமுதன் , தலைமை ஆசிரியர்
v
முன்னிலை : முனைவர் கா.எழில்வாணன்
, தமிழாசிரியர்
v
சிறப்புரை : முனைவர் திரு. நிறைமதி ,
தமிழ்த்துறைத் தலைவர், மாநிலக்கல்லூரி,
சென்னை
v
நன்றியுரை : செ. பூவிழி, 9.ஆம்
வகுப்பு மாணவி
நயம்
பாராட்டுக:
விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு
பெருமலையில், பள்ளத்தாக்கில்
பொழிகின்ற
புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில்,
நல்வயலில், விலங்கில், புள்ளில்
தெரிகின்ற
பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத
நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு
என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும்
நீ குடியிருக்க வேண்டுவேனே!
- ம.இலெ. தங்கப்பா
திரண்ட கருத்து:
பரந்து விரிந்து இருக்கின்ற
நெடிய வானத்திலும், பரந்த கடற்பரப்பிலும், விண்ணைத் தொடுமாறு உயர்ந்து நிற்கும் உயரமான மலையிலும், பள்ளத்தாக்குகளில் பொழிகின்ற நீரருவியிலும், காடுகளிலும்,
புல்வெளிகளிலும், பசுமையான வயல்களிலும்,
விலங்குகளிலும், பறவைகளிலும் மட்டுமின்றி
கண்ணிய தெரிகின்ற பொருட்களிலெல்லாம் நிறைந்து மனதில் தெவிட்டாத நுண்பாட்டே,
தூய்மையான ஊற்றே, அழகு என்னும் ஒழுங்காய்
அமைந்த பேரோவியமே, மெய்யே, மக்கள்
மனதிலும் நீ குடியிருக்க வேண்டுகிறேன் என்கிறார் ஆசிரியர்.
மையக் கருத்து :
இயற்கையின்
சிறப்பையும், வளத்தையும், அழகையும்
மக்களின் உள்ளத்தில் குடியிருக்கவேண்டும் எனக் கவிஞர் கூறுகிறார்.
மோனை நயம் :
அடியிலோ,
சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடை ஆகும்.
(எ.கா)
விரிகின்ற- வின்னோங்கு
பொழிகின்ற-புல்வெளியில்,
தெரிகின்ற - தெவிட்டாத
எதுகை நயம் :
அடிகளிலோ,
சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை ஆகும்.
(எ.கா)
புல் வெளியில் - நல் வயலில்
இயைபு நயம் :
அடிகளிலோ,
சீர்களிலோ கடைசி எழுத்தோ, சொல்லோ ஒன்றி வரத்
தொடுப்பது இயைபுத் தொடை.
(எ.கா)
வானில், கடற்பரப்பில், பள்ளத்தாக்கில்,
காட்டில், புள்ளில், நெஞ்சில்
அணி நயம்:
உள்ளதை
உள்ளவாறு இயல்பாகக் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
(எ.கா)
இப்பாடலில் ஆசிரியர் இயற்கை அழகு எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை உள்ளதை உள்ளவாறு
கூறியுள்ளார்.
மொழியோடு விளையாடு
அந்தாதிச் சொற்களை உருவாக்குக.
அத்தி, குருவி, விருது,
இனிப்பு, வரிசையாக.
(எ.கா) அத்தி, திகைப்பு, புகழ்ச்சி, சிரிப்பு,
புன்னகை, கைப்பேசி, சிறப்பு,
புதுமை, மைனா
குருவி - விருது,
துவர்ப்பு, புகழ்ச்சி, சிரிப்பு,
புன்னகை
விருது - துடுப்பு, புதிது,
துணிவு
இனிப்பு - புளிப்பு, புரட்சி, சிரிப்பு,
புதிது, திகைப்பு
வரிசையாக - கசப்பு, புலமை,
மைனா
கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப்
பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க:
வா |
|||
|
இறந்தகாலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
நான் |
வந்தேன் |
வருகிறேன் |
வருவேன் |
நாங்கள் |
வந்தோம் |
வருகிறோம் |
வருவோம் |
நீ |
வந்தாய் |
வருகிறாய் |
வருவாய் |
நீங்கள் |
வந்தீர்கள் |
வருகிறீர்கள் |
வருவீர்கள் |
அவன் |
வந்தான் |
வருகிறான் |
வருவான் |
அவள் |
வந்தாள் |
வருகிறாள் |
வருவாள் |
அவர் |
வந்தார் |
வருகிறார் |
வருவார் |
அவர்கள் |
வந்தார்கள் |
வருகிறார்கள் |
வருவார்கள் |
அது |
வந்தது |
வருகிறது |
வரும் |
அவை |
வந்தன |
வருகின்றன |
வருபவை |
காட்சியைக்கண்டு கவினுற எழுதுக
அகராதியில் காண்க
1.
நயவாமை
– விரும்பாமை
2.
கிளத்தல்-
புகழ்ந்து கூறுதல்
3.
கேழ்பு
– நன்மை
4.
செம்மல்-
தலைவன்
5. புரிசை - மதில்சுவர்
படிப்போம்: பயன்படுத்துவோம்
1.
COMPARATIVE
GRAMMAR – ஒப்பிலக்கணம்
VOWELS
- உயிரொலிகள்
3.
LEXICON
- பேரகராதி
4.
CONSONANTS
- மெய்யொலிகள்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி