8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-4

  8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 23-06-2025 முதல் 27-06-2025      

மாதம்         ஜூன்

வாரம்     : நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ் 

தலைப்பு : 1. இயற்கையைப் போற்றுவோம் 2. பட்ட மரம்   

1.கற்றல் நோக்கங்கள்   :

     இயற்கையின் சிறப்புகளை அறிதல்

     @   நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல் 

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        #     உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  : 

       @ திங்கள் ,கதிரவன்,வான்மழை ஆகியவற்றைப் போற்றுவோம்.

@ சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
@ இவர் சேர மரபைச் சேர்ந்தவர்

       @  மரங்களை அழிப்பது மனிதனுக்குப் பேராபத்து.

        @ கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்


5.ஆசிரியர் செயல்பாடு              :

    Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

   Ø   நீரின்மையால் மரங்கள் அழிந்து வருவதை மாணவர்க்குப் புரியவைத்தல்

   @ ஆசிரியர் குறிப்பை விளக்குதல்

   @ அருஞ்சொற்களின் பொருளைக் கூறுதல்

6.கருத்துரு வரைபடம்:

கருத்துரு வரைபடம்



பட்டமரம்

7.மாணவர் செயல்பாடு:

       Ø  நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்
@ மரங்களை அழிப்பதன் தீய விளைவுகளை உணர்தல்
@ உண்ர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
Ø   கவிஞர் தமிழ் ஒளி யாருடைய வழித்தோன்றல்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
    Ø  சிலப்பதிகாரணம் - பெயர்க்காரணம் தருக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
    @ பட்டமரம் எவ்வாறு வருந்தியது?
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       9005 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மொழிக்கூறுகளைக்

 கருத்தரங்கிற்கு ஏற்றவாறு திரட்டிபகுத்தும் தொகுத்து முறைப்படுத்திப் பேசுதல்.

       9006  - பாடல்களில் வெளிப்படுத்தும் இயற்கையழகை உணர்ந்து உள்வாங்குதல்.

 கவிதையின் மொழி நடையைப் படித்தறிந்து புதிதாக உருவாக்குதல்.

         

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை