7 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-1 25-26

 7.ஆம் வகுப்பு - தமிழ் வினாவிடைகள்


7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்

வினா விடைகள்

இயல்-1 எங்கள் தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள்

அ) வழி  ஆ) குறிக்கோள்  இ) கொள்கை  ) அறம்

2. 'குரலாகும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) குரல் + யாகும்  இ) குர + லாகும் ஆ) குரல் + ஆகும் ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வான்ஒலி  ஆ) வானொலி   இ) வாவொலி    ஈ) வானலி

குறு வினா

1 . தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?

விடை:

ü  தமிழ் நிறைந்த அறிவைத் தரும்

ü  கொல்லாமையைக் குறிக்கோளாகக் கொண்ட்து

ü   பொய்யாமையைக் கொள்கையாகக் கொண்டது

ü  அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

விடை:

ü  தமிழ்மொழியைக் கற்றோர், பொருளுக்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

ü  தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

சிறு வினா

1. எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

விடை:

ü  தமிழ் நிறைந்த அறிவைத் தரும்

ü  கொல்லாமையைக் குறிக்கோளாகக் கொண்ட்து

ü   பொய்யாமையைக் கொள்கையாகக் கொண்டது

ü  அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

ü  அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும்.

சிந்தனை வினா

1. கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

விடை:

    தேன் இனிமையானது; சுவைமிக்கது; அதைப் போல பண்புடையதால் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

இயல்-1 ஒன்றல்ல இரண்டல்ல

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்  ஆ) பரிபாடல்   இ) பரணி   ஈ) அந்தாதி

2. வானில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்

அ) அகில்   ஆ) முகில்   இ) துகில்   ஈ) துயில்

3. இரண்டல்ல' என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது

அ) இரண்டு + டல்ல    ஆ) இரண் + அல்ல

இ) இரண்டு + இல்ல   ஈ) இரண்டு + அல்ல

4. தந்துதவும்' என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது

அ) தந்து + உதவும்  ஆ) தா + உதவும் இ) தந்து + தவும் ஈ) தந்த + உதவும்

5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

அ) ஒப்புமை இல்லாத ஆ) ஒப்பில்லாத இ) ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத

குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

விடை:

ü  தமிழ்நாட்டில் தென்றல் வீசும்

ü  சுவைமிகுந்த பழங்களும் ,தானியங்களும் விளையும்.

ü  நிறைய நன்செய் நிலங்கள் உடையது.

2. ஒன்றல்ல இரண்டல்ல எழுதுக. பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

விடை:

ü  முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.

ü  புலவருக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறுவினா

1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

விடை:

·        பரணி இலக்கியம்  

·        பரிபாடல்

·        கலம்பக நூல்கள்

·        சங்கஇலக்கியங்கள்

சிந்தனை வினா

1. தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகக் காரணம் யாது?

விடை:

ü  சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஒழுக்கம் மிகுந்ததாக இல்லை

ü  மக்கள் தவறான செயல்களில் ஈடுபட்டனர்

ü  அவர்களை நல்வழிப்படுத்தவே அற இலக்கியங்கள் தோன்றின

இயல்-1 பேச்சு மொழியும், எழுத்துமொழியும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மொழியின் முதல்நிலை பேசுதல் ஆகியனவாகும்.

அ) படித்தல்  ஆ) கேட்டல்  இ) எழுதுதல் ஈ) வரைதல்

2. ஒலியின் வரிவடிவம் ஆகும்.

அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு

3. தமிழின் கிளைமொழிகளில் ஒன்று

அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்

4. பேச்சுமொழியை------ வழக்கு என்றும் கூறுவர்

அ) இலக்கிய   ஆ) உலக இ) நூல் ஈ) மொழி

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.  - சரி

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.  -  சரி

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.  -  சரி

4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.  -  தவறு

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம்.  - சரி

ஊடகங்களை வகைப்படுத்துக.

எழுத்து மொழி

பேச்சு மொழி

செய்தித்தாள்

வானொலி

நூல்கள்

தொலைக்காட்சி

மின்ன்ஞ்சல்

திரைப்படம்

குறு வினா

1. மொழின் இருவடிவங்கள் யாவை?

விடை:    . பேச்சுமொழி    . எழுத்துமொழி

2. பேச்சுமொழி என்றால் என்ன?

விடை:   வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.

3. வட்டாரமொழி எனப்படுவது யாது?

விடை:   ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

சிறு வினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

பேச்சு மொழி

எழுத்து மொழி

1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.

1. எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம்.

2. உணர்ச்சிக் கூறுகள் குறைவு.

3. உடல்மொழி, குரல் ஏற்றத் தாழ்வுக்கு இடம் உண்டு.

3 உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை

4. திருத்தமான மொழிநடையில் அமைகிறது.

4. திருத்தமான மொழிநடையில் அமைவதில்லை.

2. கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

விடை:   வாழும் இடத்தின் நிலஅமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும். அம்மாற்றத்தின் காரணமாக கிளைமொழிகள் உருவாகின்றன

சிந்தனை வினா

இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

விடை:

    இலக்கியங்கள் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இயல்-1 ஆளூக்கு ஒரு வேலை (பொம்மலாட்டம்)

பாடப்பகுதிப் பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.

முன்னுரை:

    ஆளுக்கு ஒரு வேலை என்னும் பொம்மலாட்டக் கதையைக் காண்போம்.

ஆளுக்கு ஒரு வேலை:

v  சிறுகுடும்பம் ஒன்றுள்ளது. அக்குடும்பத்தில் உள்ளபையன் பள்ளி செல்லாமல் ஊர்சுற்றிக் கொண்டே இருப்பான். யார் கூறினாலும் கேட்காத பிடிவாத குணம் கொண்டவன்.

v  ஒரு நாள் அப்பாவும் அம்மாவும்.படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

v  அவன் வேண்டா வெறுப்பாகப் பள்ளி சென்றான்.பள்ளியை விட்டு ஓடினான். விளையாட யாராவது வருவார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

v  அப்பொழுது அந்த வழியாக எறும்பு, தேனீ பொதிமாடு,ஆமை,முயல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளையாடக் கூப்பிட்டான்.

v  அவை அனைத்தும் தனக்கு வேலை உள்ளதாகச் சொல்லி,அவை விளையாட மறுத்து விட்டன.

v  பிறகு குட்டிச் சுவரில் அமர்ந்தான். அது இடிந்து பூச்சி,எறும்பு, வண்டு ஆகியன உனக்குத்தான் வேலைஇல்லை.நாங்கள் சேர்த்த பொருளை எல்லாம் உடைத்து விட்டாயே!' என்றுச் சொல்லி அவனைக் கடித்தன.மனம் மாறினான்.

v  தன் அம்மாவிடம்,உலகத்தில் உள்ள அனைத்துக்கும் வேலை உள்ளது. எனக்குப் படிப்பது தான் வேலை என்பதைப் புரிந்து கொண்டேன். இனி பள்ளிக்குச் செல்கின்றேன் என்றான்.

முடிவுரை:

     மாணவர்களுக்குப் படிப்பது மட்டும் தான் வேலை என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

இயல்-1 குற்றியலுகரம் , குற்றியலிகரம்

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

   ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

விடை:

v  நெடில் தொடர்  - காசு, ஆறு , ஏடு

v  ஆய்தத்தொடர்எஃகு

v  உயிர்த்தொடர்விறகு

v  வன் தொடர்எட்டு,உழக்கு

v  மென் தொடர்பந்து , கரும்பு

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

 1. பசு, விடு, ஆறு, கரு   -   விடை : கரு

2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து  - விடை : பஞ்சு

3. ஆறு, மாசு, பாகு, அது  - விடை: அது

4. அரசு, எய்து, மூழ்கு,மார்பு  - விடை : அரசு

5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு  - விடை : எஃகு

குறு வினா

1. 'குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

விடை:

ü  குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்

ü  தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

விடை:

    ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

கற்பவை கற்றபின்

1. ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.

விடை:

எண்ணுப்பெயர்கள் :

    ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.

குற்றியலுகரச் சொற்கள் :

     ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.

2. குற்றியலுகர எண்ணுப்பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

விடை:

ü  வன்தொடர் குற்றியலுகரம் -  மூன்று, எட்டு, பத்து

ü  மென் தொடர் குற்றியலுகரம் - ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது

ü  உயிர்த் தொடர் குற்றியலுகரம்  - ஆறு

3. குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.

   (எ.கா)  ஒன்று  -  1 + 1/2 + 1/2  =  2

விடை:

1.     இரண்டு   -   1 + 1 + 1/2  + 1/2  =3

2.    மூன்று   -  2 + 1/2  + 1/2  = 3

3.    நான்கு  -  2 + 1/2  + 1/2  = 3

4.    ஐந்து  -  2 + 1/2  + 1/2  = 3

5.    ஆறு -  2 + 1/2  = 2  1/2

6.    ஏழு   -  2 + 1 = 3

7.    எட்டு  -  1 + 1/2 + 1/2  = 2

8.    ஒன்பது  -  1 + 1/2 +1 + ½ = 3

9.    பத்து  -  1 + 1/2 + 1/2  = 2

4. கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.

விடை:

ü  பாகு, வாகு,

ü  பாடு, சாடு, ஓடு, விடு,

ü  காசு, வீசு, பேசு,

ü  வாது, கேது, சாது, மாது,

ü  வறு, சேறு, செறு,

ü  வது,வடு, பொது.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

   (முன்னுரை மொழி பற்றிய விளக்கம் தாய்மொழி தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் சாதுவன் வரலாறு நமது கடமை முடிவுரை)

தாய்மொழி பற்றிய கட்டுரை

முன்னுரை:
          மனித வாழ்வில் மொழி முக்கியமான கூறாகும். அது எண்ணங்களை பகிரவும், அனுபவங்களை வெளிப்படுத்தவும் பயன்படுகிறது.

மொழி பற்றிய விளக்கம்:
      மொழி என்பது பேச, எழுத, வாசிக்க பயன்படும் தொடர்பு சாதனமாகும். இது சமூக வளர்ச்சிக்கும், அறிவுத் துறைக்கும் அடித்தளம்.

தாய்மொழி:
       ஒருவர் பிறந்து முதல் முறையாகக் கேட்கும், பேசும் மொழியே தாய்மொழி. அது குழந்தையின் மனதில் ஆழமாக பதியும்.

தாய்மொழிப் பற்று:
           தாய்மொழிக்கு பற்று வைக்கும் மனப்பாங்கு நம் பண்பாட்டை உறுதிப்படுத்துகிறது. தாய்மொழி வளர வளர, நம் சமூகமும் அறிவும் வளம் பெறுகிறது.

தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்:

        பரிதிமாற் கலஞ்ஞர், பாரதி, உவேசா போன்றோர் தங்கள் வாழ்நாளையே தமிழுக்கு அர்ப்பணித்தவர்கள். அவர்கள் தாய்மொழி மீது கொண்ட பற்று நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

நமது கடமை:
            தாய்மொழியை பேணி பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கு உரிய முறையில் கற்றுத்தருவதும் நம்மில் ஒவ்வொருவரின் கடமையாகும்.

முடிவுரை:
             தாய்மொழி நம் அடையாளமும், மரபும் ஆகும். அதைப் பேணுவது நம் பெருமையும் பாக்கியமும் ஆகும். தாய்மொழியைக் காப்போம், வளர்ப்போம்!

மொழியோடு விளையாடு

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

  1. இருதிணை - உயர்திணை, அஃறிணை.
  2. முக்கனி - மா, பலா, வாழை,
  3. முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்,
  4. நாற்றிசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
  5. ஐவகைநிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை,
  6. அறுசுவை இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு,

இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும்.

    ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.

2. மழலை பேசும் மொழி அழகு.

    இனிமைத் தமிழ் மொழி எமது.

3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும்.

    அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.

4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.

    எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.

5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர்.

    குழந்தையை மெதுவாக நட என்போம்.

கலைச்சொல் அறிவோம்.

  1. ஊடகம் – Media      
  2. பருவ இதழ் - Magazine    
  3. மொழியியல் - Linguistics
  4. பொம்மலாட்டம் - Puppetry     
  5. ஒலியியல் - Phonology
  6. எழுத்திலக்கணம் – Orthography   
  7. இதழியல் – Journalism  
  8. உரையாடல் - Dialogue



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை