10 TH STD TAMIL QUESTION & ANSWER UNIT-7

  10.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)


மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க:- 

   1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

    ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட் ஐன்ஸ்டின்

    2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

     பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

    3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

இருண்ட தருணங்களில் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும் - அரிஸ்டாட்டில்

    4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறதுவின்ஸ்டன் சர்ச்சில்.

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-

மனக்கோட்டை      

படிக்காமல் தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான்

அள்ளி இறைத்தல்

பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான்

கண்ணும் கருத்தும்

 கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள்.

ஆறப்போடுதல்

கோபத்தை ஆறப்போட வேண்டும்

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-

தாமரை இலை நீர்போல

துரோகிகளின் நட்பு தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும்.

மழைமுகம் காணாப் பயிர்போல

தந்தையை இழந்த குடும்பம் வருமானம் இன்றி மழைமுகம் காணாப் பயிர்போல வாடி இருக்கிறது.

கண்ணினைக் காக்கும் இமைபோல

பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்க வேண்டும்.

சிலை மேல் எழுத்து போல

மூத்தோர் சொல் சிலை மேல் எழுத்துப் போல நிலையானது.

பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

            சேரர்களின் பட்டப் பெயர்களில்கொல்லி வெற்பன்’, ‘மலையமான்போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்மலையமான்எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-

தம்பீ? எங்க நிக்கிறே?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”

அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.

சரிங்கண்ணே.”

விடை:

தம்பி? எங்கே நிற்கின்றாய்?”

நீங்கள் சொன்ன இடத்திலே தான் அண்ணே! எதிர்ப்பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருக்கின்றது”.

அங்கேயே தேநீர் குடித்து விட்டு, செய்தித்தாள் படித்துவிட்டு இரு......நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்

அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டுவாருங்கள்  அண்ணா! அவனைப் பார்த்தே நீண்ட நாள்களாயிற்று!”.

அவன் பாட்டியுடன் வெளியூர் சென்று உள்ளான்.உன் ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்”.

மிகவும் சிறுவயதில் பார்த்தது அண்ணா! அப்போது  அவனுக்கு மூன்று வயது இருக்கும்!”.

இப்போது உயரமாக வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது!ஊருக்கு எங்களுடன் வருவான்.

பார்த்துக்கொள்!.சரி,தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்..”

சரி அண்ணா”.

கடிதம் எழுதுக

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரியஅலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்          

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001          

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                                  .இளமுகில்.

இடம்: அரக்கோணம்,

நாள்: 15-10-2022.

கவிதையைப் படித்து அதன் உரையாடல் வடிவத்தை தொடர்ந்து எழுதுக.

மகள் : அம்மா! என் காதுக்குத் தோடு வாங்கித் தாங்கம்மா. வெறுங்காதோடு இருக்க முடியாது.

அம்மா : மகளே! காதுக்குக் கம்மல் அழகல்ல. சான்றோரின் மொழிகளைப் பணிவுடன் கேட்டு உன்   

            காதில் போட்டுக்கொள்.

மகள் : அம்மா! கைக்கு வளையலைக் கடன் வாங்கியாவது கொடுங்கள். பக்கி என்று என்னைக் கேலி

           செய்வார்கள்.

அம்மா : வராத விருந்தினர் வந்தால் உபசரிப்பது வளையல். அவர்கள் சொல்வதுதான் உன் கை விலங்கு.

           நினைத்தால் முடியும்.

அம்மா : மகளே! கல்விதான் பெண்ணுக்கு ஆபரணம். இரத்தினக் கல் ஆறாத ரணம். கற்ற பெண்களை

           இந்தநாடு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அறிந்து கொள் என் மகளே!

நயம் பாராட்டுக:-

          கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

                        குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

            ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

                        உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

            மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

                        மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

            ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

                        ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

-        வள்ளலார்.

திரண்ட கருத்து :

          கோடை வெப்பத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு இளைப்பாற ஏற்ற குளிர்ந்த மரம் போன்றவனாகவும்,அம்மரம் தரும் நிழல் தருபவனாகவும், அந்நிழலிடத்தில் மரத்தில் பழுத்த பழமாகவும், அதனை ஒட்டி அமைந்த் நீரோடையில் ஓடும் இன்சுவை நீராகவும், அந்த ஓடையில் மலர்ந்த நறுமணமிக்க மலராகவும், மென்மையாக வீசுகின்ற பூங்காற்றாகவும், அந்த காற்றினால் சுகத்தை தருபவனாகவும், சுகத்தில் உண்டான இன்ப பயனாகவும், சிறு வயதில் என்னை மணந்த மணவாளனாகவும் இருக்கும் அம்பலத்தில் ஆடும் அரசே என் பாமாலையை ஏற்றுக் கொள்க.

மையக் கருத்து:

          வள்ளலார் அனைத்துப் பொருட்களிலும் இறைவனைக் காணுகிறார். அதனை பாமலையாக சூட்டுகிறார்.

மோனை :

          சீர்தோறும் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

          கோடையிலே - குளிர்தருவே

          டையிலே    - கந்ததண்ணீர்

          மேடையிலே   - மென்காற்றில்

            டையிலே   - டுகின்ற

எதுகை :

          சீர் தோறும் அடி தோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

          கோடையிலே - டையிலே

            மேடையிலே   - டையிலே           

இயைபு :

          அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது இயைபு.

          கனியேதண்ணீரே

            மலரே - காற்றே

            பயனே - அருளே

அணி நயம் :

          இப்பாடல் இறைவன மரமாகவும், நிழலாகவும், கனியாகவும், மலராகவும், தென்றலாகவும் பாடியிருப்பதால் உருவக அணி வந்துள்ளது.

சந்த நயம் :

          அடிதோறும் எட்டு சீர்களைப் பெற்றுள்ளதால் எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

கண்டுபிடித்து எழுதுக:-

ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....

ஒன்று

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்

இரண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்காது எனின்

மூன்று

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்

நான்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

ஐந்து

கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள

ஆறு

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு

ஏழு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்

எட்டு

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பத்து

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;- 

கானடை

கான் அடைகாட்டைச் சேர்

கான் நடைகாட்டுக்கு நடத்தல்

கால்நடைகாலால் நடத்தல்

வருந்தாமரை

வரும் + தாமரைவரும் தாமரை மலர்

வருந்தா + மரைதுன்புறாத மான்

வருந்து + + மரைதுன்புறும் பசுவும் மானும்

பிண்ணாக்கு

பிண் + நாக்குபிளவு பட்ட நாக்கு

பிண்ணாக்குஎண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள்

பலகையொலி

பல + கை + ஒலிபல கைகள் எழுப்பும் ஒலி

பலகை + ஒலிமரப் பலகையின் ஒலி

 

அகராதியில் காண்க:

1)    ஆசுகவிகூறியவுடன் பாடுவது

2)   மதுரகவிசுவையுடன் பாடுவது

3)   சித்திரகவிஎழுத்தைச் சித்திரமாக வடித்து பாடுவது

4)   வித்தாரக்கவிவிரிவாகப் பாடுவது

கலைச்சொற்கள் (படிப்போம்; பயன்படுத்துவோம்!)

1.     Happiness - மகிழ்ச்சி

2.    Gratuity - பணிக்கொடை

3.    Sceptor - செங்கோல்

4.    Truth - வாய்மை

5.    Charity ஈகை

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 




Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை