10.ஆம் வகுப்பு தமிழ்
வினா விடைகள் (2025-2026)
திறன் அறிவோம்
பலவுள்
தெரிக.
1.
சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) உழவு,
மண். ஏர். மாடு ஆ) மண், மாடு, ஏர். உழவு
இ) உழவு, ஏர்,
மண், மாடு ஈ) ஏர். உழவு, மாடு, மண்
2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
3. நச்சிலைவேல்
கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு -இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற
நாடுகள் முறையே
அ) பாண்டிய நாடு, சேர நாடு ஆ) சோழ நாடு, சேர நாடு
இ) சேர நாடு, சோழ நாடு ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
4.
இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல்
இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை
முற்றுகையிடல்
5.
'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது
எங்களுக்கு வேண்டும்'
மாலவன் குன்றமும் வேலவன்
குன்றமும் குறிப்பவை முறையே-
அ) திருப்பதியும்
திருத்தணியும் ஆ) திருக்கணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
குறுவினா
1.
பாசவர், வாசவர், பல்நிண
விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
விடை:
# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்
#
# உமணர் – உப்பு விற்பவர்
2.
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ - இவ்வடியில் சேற்றையும்
வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
விடை: அள்ளல்
– சேறு , பழனம் - வயல்
3.
வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச்
சான்று தருக.
விடை: நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.
4.
புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
விடை: வெட்சி-கரந்தை , வஞ்சி-காஞ்சி
, நொச்சி-உழிஞை
5.
பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.
விடை: வெட்சித்திணைமுதல்
பாடாண் திணை வரைஉள்ள புறத்திணைகளில் பொதுவான செய்திகளையும் அவற்றுள் கூறப்படாத செய்திகளையும்
கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
6.
பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சோன் ஆண்ட மாண்பினைக்
காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும்
நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்
-ம.பொ.சி.
விடை: பழங்காலத்திலே
பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன்,
- ம.பொ.சி.
சிறுவினா
1. சேர,
சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம்
வழி விளக்குக.
விடை:
சேர நாடு:
சேற்று
வயலில் ஆம்பல் மலர்கள் விரிந்தன. அதனைப் பார்த்த நீர்ப்பறவை நீரில் தீப்பிடித்ததாக
அஞ்சி, தனது குஞ்சுகளைச் சிறகுகளால் மறைத்தன.
சோழ நாடு:
உழவர்கள் நிற்போர் மீது ஏறி நின்று மற்றவர்களை ”நாவலோ” என்று அழைப்பர். இது போரின் போது ஒரு வீரன் மற்ற வீரர்களை அழைப்பது போன்று உள்ளது. நெல்
வளமும் யானைப்படையும் சோழ நாட்டில் உள்ளதை இது காட்டுகிறது.
பாண்டியநாடு:
சங்கின் முட்டைகள், புன்னை மொட்டுகள் பாக்குமணிகள் ஆகியவை முத்துகள் போல இருந்தன. பாண்டியநாடு இத்தகைய முத்து வளத்தை உடையது.
2. "தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
எங்கள் தலையை கொடுத்தாவது
தலைநகரைக் காப்பாற்றுவோம்.
விளக்கம்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக்
காப்போம்” என்று முழங்கினார்.
3. பின்வரும்
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
"பகர்வனர் திரிதிரு நகரவீதியும்:
பட்டினும்
மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு
நுண்வினைக் காருகர் இருக்கையும்:
தூசும்
துகிரும் ஆரமும் அகிலும்"
அ) இவ்வடிகள்
இடம்பெற்ற நூல் எது?
விடை: சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் உள்ள
மோனையை எடுத்து எழுதுக.
விடை: பகர்வணர் - பட்டினும்
இ) எதுகைச் சொற்களை
அடிக்கோடிடுக.
விடை: பட்டினும் - கட்டு
ஈ) காருகர் -
பொருள் தருக.
விடை: நெய்பவர்
உ) இப்பாடலில்
குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
விடை: சந்தனம், அகில்
4. பின்வரும்
பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.
மருவூர்ப் பாக்கம்
மருவூர்ப்பாக்கம் என்பது
நகரின் உட்பகுதியாகும். பட்டினப்பாக்கம் என்பது கடற்கரைக்கு அருகிலுள்ள
பகுதியாகும். தொழில்கள் மிக்க பகுதி மருவூர்ப்பாக்கம்: வாணிபம் செய்வோரும், தொழில்
செய்வோரும் வாழ்ந்த பகுதி அது. அங்கே தெருக்கள் தனித்தனியே இன்ன இன்ன தொழிலுக்கு
என வகைப்படுத்தி இருந்தன. நறுமணப் பொருள் விற்போர் ஒரு தனித்தெருவில் குடி
இருந்தனர். நூல் நெய்வோர் தனிவீதியில் இருந்தனர். பட்டும், பொன்னும்,
அணி கலன்களும் விற்போர் தனிவீதியில் தங்கி இருந்தனர். பண்டங்களைக்
குவித்து விற்கும் தெரு கூலவீதி எனப்பட்டது. அப்பம் விற்போர், கள் விற்போர், மீன் விலைபகர்வோர், வெற்றிலை, வாசனைப் பொருள்கள் விற்போர், இறைச்சி, எண்ணெய் விற்போர், பொன்,
வெள்ளி, செம்புப் பாத்திரக் கடைகள்
வைத்திருப்போர். பொம்மைகள் விற்போர். சித்திரவேலைக்காரர். தச்சர், கம்மாளர். தோல் தொழிலாளர், விளையாட்டுக் கருவிகள்
செய்வோர், இசை வல்லவர்கள், சிறு தொழில்
செய்பவர்கள் இவர்கள் எல்லாம் ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
மையக்கருத்து:
மருவூர்ப் பாக்கம் என்பது
தொழில்கள் மிகுந்த நகரின் ஒரு முக்கியமான பகுதியாகும், இதில்
ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனி தெருக்கள் அமைந்திருந்தன.
மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் ஒரே பகுதியில் கூடி வாழ்ந்தனர்.
நெடுவினா
1. நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
என்ற பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும்,
வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை
மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று
மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம்.
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்
சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு:
பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நமது நாட்டில் எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. அக்காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,குறிப்பாக
ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை
ஆளத்தொடங்கினர். இது பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே
விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத் தூண்டினர்.
இவர்களது கடுமையான போராட்டத்தாலும், தியாகத்தாலும்
இந்தியா 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை
பெற்றது.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன்
வளர்ந்தால்தான் நாடும் வீடும் வளம் பெறும். துன்பத்தில்
மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை
அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை
மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு
எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள்
பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள்
தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு
வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,
சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்
மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில் மாணவர்கள் கட்டாயம் ஈடுபட
வேண்டும்.
முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க,
நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும், புதிய இந்தியா
உருவாகும்.
2.
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
|
மருவூர்ப்பாக்க
வணிக வீதிகள் |
இக்கால வணிக வளாகங்கள் |
1 |
நறுமணப்
பொருட்கள், வண்ணக் குழம்பு, போன்றவை வீதிகளில் வணிகம்
செய்யப்பட்டன. |
நறுமணப்
பொருட்கள் போன்றவை கடைகளில் மட்டுமே விற்கப்பட்டன. |
2 |
பட்டு, பருத்தி நூல் ஆகியவற்றைக் கொண்டு துணிகள்
தயாரிக்கும் கைத்தொழில் வல்லுநர்களான
காருகர் நிறைந்திருந்தனர். |
இன்றைக்கு
கைத்தறி ஆடைகளை விட விசைத்தறி ஆடைகளை மக்கள் விரும்பி அணிகின்றனர். |
3 |
முத்துமணியும்
பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு வணிக வீதிகளில் குவிந்திருந்தன. |
குளிரூட்டப்பட்ட
அறைகளில் பல்வேறு அலங்காரங்களுடன் வெள்ளி பொன் உள்ளிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. |
4 |
எட்டு
வகை தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடை வீதிகள் இருந்தன. |
எல்லாவித
பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன. |
5 |
மருவூர்
பார்க்கத்தில் பொற்கொல்லர் தையற்காரர் தச்சர் உட்பட பலரும் இருந்தனர்.
|
இன்றைய
வணிக வளாகங்களில் பல நவீன சாதனங்களை விற்பவர்களும் பழுது பார்ப்பவர்களும்
உள்ளனர்.
|
3.
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
முன்னுரை:
விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர்.
அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு
அருந்தொண்டாற்றி பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக்
கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர்.
அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற
திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார்.
பாலசரசுவதி:
இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில்
தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும்
நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த
இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன கன
மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.
இராஜம் கிருஷ்ணன்:
சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும்
எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி"
என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி
உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு மணிகள்" எனும் புதினமாக
வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை "குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின்
சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:
காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற
அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும்
உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.
மதுரை சின்னப்பிள்ளை:
இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும்
இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.
வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும்
அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின்
குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண் அரசின் "பெண்
ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின் "அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின் பொதிகை விருதையும்
பெற்றவர்.
முடிவுரை:
பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும்
உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு
அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத் திகழ்கின்றனர்.
4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா அறிக்கை
v
மகளிர் நாள் விழா 08-05-2024 அன்று எங்கள் பள்ளி கலையரங்கத்தில்盛ாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
உற்சாகமாகk கலந்து கொண்டனர்.
v
விழா தலைமை ஆசிரியரின்
வரவேற்புரையுடன் தொடங்கப்பட்டது. அவர், மகளிரின்
முக்கியத்துவத்தை வலியுறுத்தி அனைவரையும் வரவேற்றார்.
v
அதனைத் தொடர்ந்து சிறப்பு
விருந்தினராக வந்த இதழாளர் கலையரசி அவர்கள் விழாவின் சிறப்புரையை
நிகழ்த்தினார்.
v
பின்னர், ஆசிரியர்கள் மகளிர் தினத்துக்கான
வாழ்த்துரைகள் கூறினர். விழாவின் நிறைவில் மாணவத் தலைவர் நன்றியுரை ஆற்றினார்.
விழா சிறப்பாக நடைபெற்றது.
v
இவ்வாறு மகளிர் தின விழா அருமையாகவும்
சீரான முறையிலும் நடத்தப்பட்டது.
கற்பவை கற்றபின்
( பக்க எண்: 125)
உங்களைக் கவர்ந்த எவரேனும் ஓர் அறிஞர்
அல்லது அரசியல் தலைவர் தம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தாமே சொல்வதைப் போன்று தன்
வரலாறாக மாற்றி எழுதுக.
அப்துல் கலாம்
முன்னுரை:
நான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேசுவரத்தில் ஜைனுல்லா மரைக்காயர்-ஆஷிமா தம்பதியருக்கு
மகனாகப் பிறந்தேன்.என் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து
கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இளமைக்காலம்:
என்னுடைய பள்ளிப் படிப்பை இராமேசுவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்
வழிக் கல்வி மூலம் தொடங்கினேன்.அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறு வயது முதலே
ஆர்வம் கொண்டிருந்தேன். பத்திரிகை விற்பனை செய்து என்னுடைய உறவினருக்கு உதவி
செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் படிப்புக்காகச் செலவு செய்தேன். பள்ளிப்
பருவத்தில் கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது பறவைகள் எவ்வாறு பறக்கின்றன என்பதை
ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதுவே பின்னாளில் நான்
விமானத்தைவடிவமைக்கத் தூண்டுகோலாக இருந்தது.
கல்லூரிப்படிப்பு:
1954 ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.1955 ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டியில் விண்வெளி பொறியியல் படிப்பை
முடித்தேன்.
விமான வடிவமைப்பு:
எம்.ஐ.டியில் படித்து முடித்த பின் உள்நாட்டு தொழில்நுட்ப அறிஞர்களின்
உதவியுடன் உள்நாட்டில் கிடைத்த பொருள்களைக் கொண்டு நந்தி என்ற விமானத்தை
வடிவமைத்து அதை இயக்கியும் காட்டினேன்.
பணி:
1983 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்
தலைவராகவும் பாதுகாப்பு அமைச்சக அறிவியல் ஆலோசகராகவும் பொறுப்பேற்றேன்.
சாதனைகள்:
ü
இந்தியாவில் முதல்முறையாக 1974ஆம் ஆண்டு
"சிரிக்கும் புத்தர்" என்ற திட்டத்தில் அணுவெடிப்புச் சோதனை
நிகழ்ந்தது.அத்திட்டத்தில் பங்கேற்ற 60 விண்வெளி
பொறியியல் அறிஞர்களில் நானும் ஒருவனாக இருந்தது எனக்குப் பெருமை அளிக்கிறது.
ü
1980ஆம்
ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எஸ்எல்வி-3 என்ற
ஏவுகணையைப் பயன்படுத்தி ரோகிணி-1 என்ற துணைக்கோளை வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தினேன்.
ü
2002 முதல் 2007 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்து உள்ளேன்.
முடிவுரை:
நான் அறிவியல்மீது பற்று கொண்டிருந்த அளவுக்கு, தாய்மொழி மீதும் பற்று கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தநூல்
திருக்குறள் ஆகும்.மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதில் எனக்குப் பெரிய
நம்பிக்கை உண்டு.இளைஞர்களுக்கு நான் கூற விரும்புவது, "கனவு
காண்பதை சிந்தனை வடிவம் ஆக்குங்கள்,பின் செயலாற்ற
முனையுங்கள்".
கற்பவை கற்றபின்
( பக்க எண்: 134)
உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர்
- போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை
தொகுத்து எழுதுக.
குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம்
நடத்துபவர்
சாதனைப்பெண்கள்
முன்னுரை:
எங்கள் ஊரில் பல்வேறு
வகையான தொழில்களில் கடின உழைப்புடன் ஈடுபட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்கிற
பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல், குடும்பத்தையும் சமூகத்தையும்
முன்னேற்றுகிறார்கள். இங்கு அவர்களில் சிலரைப் பற்றி பார்க்கலாம்.
பூ விற்கும் சின்னம்மாள்:
சின்னம்மாள் அம்மா, இருபது வருடங்களாக
விடியலிலிருந்து வீதிகளில் பூவிற்று வருகின்றார். சாயங்காலம் வரை பூக்கூடை தலையில்
வைத்துக்கொண்டு வீதியெல்லாம் நடந்து, வீடு வீடாகச்
சென்று பூவிற்று வருகிறார். இவரது கடின உழைப்பு, நேர்த்தியான
பணியாற்றும் தன்மை, நம்மை விழிக்க வைக்கும் ஒரு சிறப்பு
உதாரணமாகத் திகழ்கிறது. இரண்டு மகள்களை கல்வியாளர்களாக
மாற்றியிருக்கிறார் என்ற பெருமை அவருக்கிருக்கிறது.
சாலையோர உணவகம் நடத்தும் காளியம்மாள்:
காளியம்மாள் தனது கணவரை
இழந்த பின்னும் தளராமல், தனது
மூன்று பிள்ளைகளை வளர்க்கச் சாலையோரத்தில் சிறிய உணவகம் நடத்தத் தொடங்கினார்.
இப்போது அவர் உணவகம் பகல் முழுவதும் வியாபாரம் செய்யும் அளவுக்கு பரவலாகப் பெயர்
பெற்றுள்ளது. சைவ உணவுகளின் சுவையும் சுத்தமும் மக்களிடையே நல்ல மதிப்பை
பெற்றுள்ளது. அவரின் உழைப்பும் மன உறுதியும், தன்னம்பிக்கையும், ஊக்கமளிக்கக் கூடியவை.
முடிவுரை:
சின்னம்மாள் மற்றும்
காளியம்மாள் போன்ற பெண்கள் தான் சமூகத்தின் அடித்தளத்தை நிலை நிறுத்தும் தூண்கள். இவர்கள்
போன்றவர்களை நாம் மட்டும் அல்ல, ஒவ்வொருவரும் போற்ற
வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்ற
பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க:
Among the five geographical divisions of the Tamil
country in Sangam literature, the Marutam region was the fit for cultivation,
as it had the most fertile lands. The
properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains
and the fertility of the soil.Among these elements of nature,sunlight was
considered indispensible by the ancient Tamils.
விடை: சங்க கால இலக்கியத்தில்
ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள்
உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
வரப் போகிறேன் |
இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன் |
இல்லாமல் இருக்கிறது |
பெரும்பாலான கிணறுகளில் நீர் இல்லாமல்
இருக்கிறது |
கொஞ்சம் அதிகம் |
இவனுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம் |
முன்னுக்குப் பின் |
பாலன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான் |
மறக்க நினைக்கிறேன் |
சோகங்களை மறக்க நினைக்கிறேன் |
தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட
முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு,
தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும்.
முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை
சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை
சாற்றுகிறது.
தொகைச்சொற்கள் |
பிரித்து
எழுதுக |
தமிழ்
எண்ணுரு |
மூவேந்தர் |
மூன்று + வேந்தர் |
௩ |
நாற்றிசை |
நான்கு + திசை |
ச’ |
முத்தமிழ் |
மூன்று + தமிழ் |
௩ |
இருதிணை |
இரண்டு + திணை |
உ |
முப்பால் |
மூன்று + பால் |
௩ |
ஐந்திணை |
ஐந்து + திணை |
ரு |
நானிலம் |
நான்கு + நிலம் |
ச’ |
அறுசுவை |
ஆறு + சுவை |
௬ |
பத்துப்பாட்டு |
பத்து + பாட்டு |
க0 |
எட்டுத்தொகை |
எட்டு + தொகை |
அ |
கடிதம் எழுதுக
நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில்
“ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள்
கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
திருத்தணி .
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்ப்பொழில் நாளிதழ்,
திருவள்ளூர்-1
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட
வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இணைப்பு:
இப்படிக்கு,
1. கட்டுரை தங்கள் உண்மையுள்ள,
இடம் : திருத்தணி
அ அ அ அ அ.
நாள் : 04-03-2021
|
பாடலில்
இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து எழுதுக;-
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
1. கம்பன் 2. உமறுப்புலவர் 3. ஜவாது புலவர் 4 காசிம் புலவர் 5.
குணங்குடி 6. சேகனாப்புலவர் 7.செய்குத்
தம்பி பாவலர்.
விளம்பரத்தைச் செய்தியாக மாற்றி அமைக்க
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்
பணிகள் தீவிரம் – “சாலை பாதுகாப்பு”
என்பது வாழ்க்கையைப் பாதுகாக்கும் நெருக்கடி அவசியம் என போலீசார்
வலியுறுத்தல்!
இராணிப்பேட்டை மாவட்டம்
ü
போக்குவரத்துத் துறையின் சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,
மாவட்ட காவல்துறையின் ஏற்பாட்டில் “சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது.
ü
நிகழ்ச்சியின் போது, பாதசாரிகள் கடக்குமிடங்கள், மோசமான சாலை அமைப்புகள், வேக வரம்பு குறிகாட்டிகள்,
சாலை சந்திப்புகள் போன்ற முக்கிய சைகைகள் பற்றிய விளக்கங்கள்
வழங்கப்பட்டன.
ü
மேலும், “சாலைப் பாதுகாப்பு என்றால் – அது வாழ்க்கையைப்
பாதுகாப்பதற்கே” என்ற பிரமிக்க வைக்கும் வாசகத்தின் மூலம்,
பொதுமக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.
ü
போக்குவரத்துத் துறையும்
காவல்துறையும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின. பள்ளி மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1.
நூலின் பயன் படித்தல் எனில் , கல்வியின் பயன் கற்றல்
2.
விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை கரு
3.
கல் சிலை ஆகுமெனில்,நெல் சோறு ஆகும்.
4.
குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து எழுத்து
5.
மீன் இருப்பது நீரில் ; தேன் இருப்பது பூவில்
அகராதியில் காண்க:
1. குணதரன் – நற்குணமுடையவன்
2. செவ்வை – நேர்மை
3. நகல் – படி, பிரதி
4. பூட்கை – கொள்கை
கலைச்சொற்கள் (படிப்போம்; பயன்படுத்துவோம்! )
1.
Agreement - ஒப்பந்தம்
2.
Discourse - சொற்பொழிவு
3.
Monarchy - முடியாட்சி
4. Border - எல்லை
5. Rebellion - கிளர்ச்சி
கல்வெட்டுகளைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களைப் பட்டியலிடுக.
1. கல்வெட்டுகளின்
வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.
2. கல்வெட்டுகளின்
மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.
3. கல்வெட்டுக்கள்
குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.
4. கல்வெட்டுக்கள்
வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.
5. கல்வெட்டு
மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி