10.ஆம் வகுப்பு தமிழ்
வினா விடைகள் (2025-2026)
10.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று
2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
அ)
கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1
மற்றும் 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
2.
"மையோ மர கதமோ மறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
அ)
கருமை ஆ) பச்சை இ) பழுப்பு ஈ) நீலம்
3.
தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ)
தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ)
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ)
தூக்குமேடை என்பது திரைப்படமா?
நாடகமா?
ஈ)
யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
4.
சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.
அ)
முதுவேனில் ஆ) பின்பனி இ) முன்பனி ஈ) இளவேனில்
5.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ)
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி,
மருதம், நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல்,
பாலை நிலங்கள்
குறுவினா
1.
சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.
விடை:
ü
பூஞ்சோலைகள்
ü
செண்பகக்
காடுகள்
ü
மலர்ப்பொய்கைகள்
ü
தடாகங்கள்
ü
கமுகத்
தோட்டங்கள்
ü
நெல்வயல்கள்
2.
அயற்கூற்றாக எழுதுக.
"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட
எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.
விடை: கலைஞரைப்
பேராசிரியர் அன்பழகனார்,
பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார்.
3
. உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய்
எழுந்திராய்'
காலதூதர் கையிலே 'உறங்குவாய்
உறங்குவாய்'
கும்பகன்னனை என்ன சொல்லி
எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
விடை:
ü
பொய்யான
வாழ்வு முடியப்போகிறது.
ü
காலனின்
தூதர் கையில் உறங்குவாய் என்கிறார்கள்
4.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில்
உழுதனர்.
முல்லைப் பூச்
செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
விடை:
# உழவர் வயலில்
உழுதனர்.
# நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச்
சென்றனர்.
சிறுவினா
1.
மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின்
கலைநயத்துடன் எழுதுக.
விடை:
v குளிர்ந்த சோலையில்
மயில்கள் ஆடுகின்றன.
v தாமரை மலர்கள் விளக்குகள்
போன்று தோன்றுகின்றன.
v குவளை மலர்கள் கண்விழித்துப்
பார்ப்பது போல் காணப்படுகின்றன.
v நீர்நிலைகளின் அலைகள்
திரைச்சீலைகள் போல் விரிகின்றன.
v மகர யாழின் தேனிசை போல்
வண்டுகள் பாடுகின்றன.
2.
கம்பராமாயணப் பாடல் அடிகளுக்கு ஏற்ற பொருளை எழுதுக.
சுறங்கு போல விற்பி டித்த
கால தூதர் கையிலே
விடை:
காற்றாடி
போல திரிகின்ற வெள்ளை பிடித்த எமனின் தூதர் கையிலே
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட
விடை:
அலைகள்
திரைச்சீலைகள் போல விரிய மகர யாழ் இசை போல் வண்டுகள் பாடுகின்றன
வேழ நெடும்படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ
விடை: யானைப்படை கண்டு
புறமுதுகாட்டி பயந்து ஓடும் வில் வீரனோ?
3.
தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட
இரண்டினை எழுதுக.
விடை:
ü
தமிழுக்காகத்
தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்
ü
மனோன்மணியம்
சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்
ü
2010
ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்
4.'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது: மலைப் பகுதிகளில் மலைப்
பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன. காலப்போக்கில் பல
மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத்
தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
விடை:
ü
சங்ககாலத்
தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப்பிரித்தனர்
ü
ஐவகை
நிலங்களுக்கேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்தனர்.
ü
இன்றைய
சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளதே தவிர மாறவில்லை.
நெடுவினா
1. போராட்டக்
கலைஞர் பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய
தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை:
கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர் எனப்
பன்முக ஆற்றல் கொண்டவர். "முத்தமிழ் அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்
தன் பதினான்காம் வயதில், பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.
பேச்சுக் கலைஞர்:
v
மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும்
பாராட்டப்பட்டது.
v
பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்"
ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்:
v
தமக்கே
உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான
பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம்,
வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை
எழுதினார்.
திரைக் கலைஞர்
v
கலைஞரின்
திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக
நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச்
செய்தார்
v
சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை
வசனம் எழுதினார்
இயற்றமிழ்க் கலைஞர்
தமிழ் மீது திராத பற்றுகொண்ட கலைஞர் நளாயினி, சித்தார்த்தன்
சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை,
புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல
சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர்,
தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட
புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.
முடிவுரை
உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.
2. சந்தக்
கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
விடை:
ü
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவிபாடும்” என்ற பழமொழிக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் கம்பர்.
ü
சந்தத்திற்கு ஏற்ற சொற்களைத் தேவையான இடத்தில்
பயன்படுத்தியுள்ளார்.
ü
பாலகாண்டத்தில் அயோத்தி நகரத்தை
வர்ணிக்கும்போதும், நடை அழகை வர்ணிக்கும் போதும்
அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் அக்காட்சிகளை நம் கண்முன் காண வைக்கிறது.
ü
இதன்மூலம் கம்பர் கலை மேடையை நமக்குச் சந்தத்தில்
செய்யுளில் வடித்துக் காட்டியுள்ளதை அறியலாம்
3. பாய்ச்சல்
கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
ஒரு கலைஞன் மற்ற கலைஞர்களிடம் இருந்து வேறுபட்டு, தனக்கெனத்
தனித்தன்மைகளைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ, உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.தன்
கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது அவன்
கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்:
நாகசுரமும், மேளமும் ஒன்றாக இணைந்து ஒலித்தன. சத்தம்
கேட்ட அழகு குனிந்து பார்த்தான். இரண்டு கால்களும் மின்னல்
வெட்டி மறைவது போலத் துள்ளிப் பாய்ந்து சென்றன. அந்தக் கால்கள் மனிதனிடம் இருந்து
மாறுபட்டு, பச்சையா? நீலமா? என்று தீர்மானிக்க முடியாத நிறத்தில் இருப்பதைக் கண்டான். ஆளுயர குரங்கு
ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின் நெருப்பாட்டம்:
திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக ஒலிக்கத்
தொடங்கின.எதற்கென்றே தெரியாமல் ஒரு கூட்டம் திகைத்து
பந்தலையே நோக்கிக் கொண்டிருந்தது. பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அழகுவின் உதவி:
சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.. கீழே புரண்ட
வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாழை அழகு இடத்தில் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர். அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத் தூக்கிக் கொண்டு
சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது
அழகுவின் ஆட்டம்:
அனுமார் கழற்றி வைத்திருந்த துணி, சலங்கை,முகத்திற்குப் போடப்படுபவை ஆகியவற்றைத் தான் அணிந்து கொண்டு அனுமார்
போல ஆடினான் அழகு. களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.அழகு உடனே
ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான். ஆனால் அனுமார் தூணில்
சாய்ந்து கொண்டு “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு
என்றார்”. அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார் அடைந்த மகிழ்ச்சி:
அனுமார் அழகுக்கு ஆட்டத்தை சொல்லிக்கொடுத்தார். அவனும் அதே போல ஆடினான்.
அனுமார் தன்னை மீறிய மகிழ்ச்சியோடு,” பேஷ் பேஷ் உடனே
பிடிச்சுகிட்டியே” என்றார்.அனுமார் அம்பு போல அவன்
முன் பாய்ந்தார்..
முடிவுரை:
“என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில்
மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
மொழியை ஆள்வோம்
மொழி பெயர்க்க:-
Kalaignar
Karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range: poems, letters, screenplays, novels,
biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has
written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as
many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to
Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a
133-foot-high statue of Thiruvalluvar in
honour of the scholar.
தமிழாக்கம்:
தமிழ் இலக்கியத்திற்கு தான்
செய்த படைப்புகளால் கலைஞர் கருணாநிதி அறியப்படுகிறார். அவரது படைப்புகளில்,
கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள்,
புதினங்கள், வாழ்க்கை வரலாறுகள், சரித்திரப் புதினங்கள், மேடை நாடகங்கள், திரைக்கதை வசனங்கள் மற்றும் திரைப்படப்பாடல்களும் அடக்கம்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள்
மற்றும் பல நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியத்துக்கு அப்பாற்பட்டு, கலை, கட்டிடக்கலை வாயிலாகவும் கருணாநிதி அவர்கள்
தனது பங்களிப்பைச் செய்துள்ளார். திருக்குறளுக்கு, "குறளோவியம்"
எழுதியதைப் போல, சென்னையில், வள்ளுவர்
கோட்டத்தில், ஒரு கட்டிடத்தின் வாயிலாக, திருவள்ளுவருக்கு ஒரு மணிமாடத்தைத் தந்துள்ளார். அந்த அறிஞருக்குப் பெருமை
சேர்க்க, கன்னியாகுமரியில், 133 அடி
திருவள்ளுவர் சிலையை கருணாநிதி எழுப்பியுள்ளார்.
தொடர்களை
அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தினார்.
அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார்; புத்தகங்களைக்
கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர்சொற்றொடராக மாற்றுக)
விடை
:
இன்னாசிரியார்,
புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக
அடுக்கங்களில் அடுக்கிவைத்து, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு
எடுத்துக்கொடுத்தார்.
2. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு
சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
விடை
:
எழுத்தை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்த கலைஞர்,
தமது எண்ணங்களை எழுத்து வழியாகக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு
சென்றார்.
3. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
விடை:
கலைஞர் முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை வார
இதழாக்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை நாளேடாக்கினார்.
4. காற்று மாசுபாட்டை குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப்
போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்வாற்றலால் இயங்கும் உறுதிகளை பயன்படுத்த
வேண்டும்.
(தனிச் சொற்றொடராக மாற்றுக)
விடை:
v
குப்பை
மேலாண்மையை மேற்கொண்டு காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும்.
v
பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை தர வேண்டும்
v
மின்னாற்றலால்
இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வே
4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில்
உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
விடை :
ஒடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது அறையில் உள்ளவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.
பிறமொழிச்சொற்களைத்
தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
பிறமொழிச்
சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச்
சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட்
பிஸ்கட் |
தங்கக்கட்டி |
வெயிட் |
எடை |
யூஸ் |
பயன்படுத்தி |
எக்ஸ்பெரிமெண்ட்
ரிப்பீட் |
சோதனை
மீண்டும் |
ஆல்
தி பெஸ்ட் |
வாழ்த்துகள் |
ஈக்வலாக |
சரிசமமாக |
பட் |
ஆனால் |
ஆன்சரை |
விடையை |
கட்டுரை எழுதுக
உங்கள் பகுதியில்
நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
முன்னுரை:
”கலைத்திருவிழா
என் மனதைக் கவர்ந்திழுத்தது”
குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன்.
அறிவிப்பு:
மகிழுந்தை வெளியில் நிறுத்தி
விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே
எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? என ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.
அமைப்பு:
கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது.
சிறு அங்காடிகள்:
கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும்
பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.
நிகழ்த்தப்பட்ட கலைகள்:
”மனதைக் கவரும்
மயிலாட்டம்
நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ”
எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது.
பேச்சரங்கம்:
கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர்.
முடிவுரை:
இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத
மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.
மொழியோடு விளையாடு
தொடரில்
விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1. வானம் கருக்கத்
தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி
மனம் உள்ளவரை
அப்பாவி என்கிறோம்.
4.கண்ணுக்குக்
குளுமையாக இருக்கும் பசும்புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள்
வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கறுத்து விடும்.
பொருத்தமானவற்றைச்
சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு,
அவிழும், தயங்கும்,மரவீடு,
பார்ப்பவர், விருது, தோற்பவர்,கவிழும்,விருந்து |
1.
விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
2.
காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்
3.
மலைமுகட்டில் மேகம் தங்கும் அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்
4.
வாழ்க்கையில் தோற்பவர் மீண்டும் வெல்வர்- இதைத்
தத்துவமாய்ப் பார்ப்பவர்
முயற்சி மேற்கொள்வர்.
5.
கைதட்டலே கவிஞர்க்கு விருது - அவையோரின்
ஆர்வமே அவருக்கு விருந்து.
அகராதியில்
காண்க
1.
தால் – நாக்கு
2.
உழுவௌ – புலி
3.
ஏந்தெழில் - மிகுந்த அழகு
4.
அகவுதல் – அழைத்தல்
5.
அணிமை
– அருகில்
நிற்க
அதற்குத் தக
தமிழ், தமிழர்,
தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின்
சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப்பின்
உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
1. என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய
நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.
2.
என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின்
பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவேன்.
3.
தூய தமிழ்ச் சொற்களை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி
அனைவரும் தூய தமிழில் பேசும் நிலையை உருவாக்குவேன்.
4.
தமிழில் புதிய புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்து தமிழ்
இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவேன்.
5.
உலகளாவிய மொழியாகத் தமிழை வளர்க்க முயற்சிப்பேன்.
கலைச்சொல் தருக
(படிப்போம்! பயன்படுத்துவோம்!)
1. PLAY
WRIGHT – நாடக ஆசிரியர்
2. SCREENPLAY
– திரைக்கதை
3. STORYTELLER
– கதை சொல்பவர்
4. AESTHETICS
– அழகியல்
வாழ்வியல் இலக்கியம் – திருக்குறள்
குறுவினா
1.
கரப்பிடும்பை இல்லார் - இத்தொடரின் பொருள் கூறுக.
விடை:
: 'பொருளை மறைத்து வைத்தல் என்னும்
துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்.
2.
தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
எழுதுக.
விடை:
1. தஞ் / சம் - நேர் நேர் - தேமா
2. எளி / யன் - நிரை நேர் - புளிமா
3. பகைக் / கு - நிரைபு - பிறப்பு.
3.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை
எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
விடை:
ஏளனம்
செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால், (இரப்பவரின்) பிச்சை
எடுப்பவரின் உள்ளம் மகிழும்.
4.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?
ஏன் என்பதை எழுதுக. (பெரிய கத்தி,இரும்பு ஈட்டி, உழைத்ததால்
கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்)
விடை:
ü உழைத்ததால் கிடைத்த
ஊதியமே கூரான ஆயுதம்
ü அதுவே பகைவரின்
ஆணவத்தை அழிக்கவல்லது
சிறுவினா
1.
வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய
இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.
விடை:
ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம்,
செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து
அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.
ü மனவலிமை,
குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல்
, நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக
அமைந்தவரேஅமைச்சராவார்.
2.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான். இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை
விளக்குக.
விடை:
இக்குறளில் வஞ்சப்
புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது.
வஞ்சப் புகழ்ச்சி அணி:
ஒரு செய்யுளில்
ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.
அணிப்பொருத்தம்
தேவர்கள் தாம் விரும்பும் மேலான
செயல்களைச் செய்தல் போல, கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான
செயல்களையே செய்வர். இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து
கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி