10 TH STD TAMIL QUESTION & ANSWER UNIT-4

 

10.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)



 

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் 

இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) திணை வழுவமைதி  ) கால வழுவமைதி

4. இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --==----மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில வங்காளம் ) வங்காள, ஆங்கில  இ) வங்காள, தெலுங்கு  ) தெலுங்கு, ஆங்கில

5. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

குறுவினா

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

விடை: குலேச பாண்டியன், இடைக்காடனார்

2. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

விடை:

v  மொழிபெயர்ப்பால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் பெருகும்.

v  பிற இனத்தாரின் கலை, பண்பாடு, நாகரிகத்தை அறியலாம்.

3. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக

விடை: அமர்+த்(ந்)+த்+ஆன்

      அமர்-பகுதி, த்-சந்தி,  ந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

4. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செய்கிறேன் இந்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

விடை: எதிர்காலம், உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

5. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக.

விடை: "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

சிறுவினா

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக.

விடை:

  • ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
  • ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
  • ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
  • ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

விடை:

ü  தொலைக்காட்சி வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களை பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது.

3. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு.

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரித்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (cranslati) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது: ஆனாய் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வர். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

விடை:

1)    மொழிபெயர்ப்பு என்பது யாது?

2)   I n t e r p r e t i n g என்பதன் தமிழாக்கம் என்ன?

3)   மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள்?

4)   ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது----என்று சொல்லப்படுகிறது.

5)   அவைப்பேச்சாளர்கள் உரையைப் பார்வையாளர்கள் எப்படிப்புரிந்து கொள்வர்?

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை:

  • 1.    குட்டி- மரபு வழுவமைதி
  • 2.   இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி
  • 3.   இதோ சென்றுவிட்டேன்கால வழுவமைதி
  • 4.   அவனைபால் வழுவமைதி                           

நெடுவினா

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

விடை:

  • ü  குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.
  • ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்
  • ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.
  • ü  குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.
  • ü  இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்
  • ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

முன்னுரை:                                                      

               வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான் வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்  தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம்.

மேரியின் குடும்பச்சூழல்:

               மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும் குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். 

மேரிக்கு நடந்த துன்பம்:

           மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து  அதைப் புரட்டத்தொடங்குகிறாள்.

          அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாதுஎன்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில்  பேசினர். அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக  ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

தூண்டுகோல்- மிஸ்வில்சன் :

         ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து  நின்றாள். பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள். குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.

சிறப்பாகக் கல்விகற்ற மேரி:

     மேரி நாள்தோறும் தன் இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக் கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின் கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி படிக்க உதவினார்.

முடிவுரை:

           மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால், எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை  இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள்.

3. தமிழின் இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

முன்னுரை :

        ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும் ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல் வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா?

மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:

     'ஒரு மொழியில் உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்:

            என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:

      மொழிபெயர்ப்பு எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.

எட்டுதிக்கும் செல்வீர்:

         எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

மொழிபெயர்ப்புக் கல்வி:

     மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.

முடிவுரை :

    'உலக நாகரிக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும் மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.

கற்பவை கற்றபின்

(பக்க எண்: 83)

கல்விக்கண் திறந்தவர்களுக்கு இடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி கட்டுரை வரைக.

மருத்துவர் முத்துலட்சுமி

முன்னுரை:

இந்திய மகளிர் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் டாக்டர் முத்துலட்சுமி.. மருத்துவப் பயிலும் முதல் இந்தியப் பெண் எனும் பெருமையை பெற்றார். சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

பிறப்பு மற்றும் கல்வி

முத்துலட்சுமி ரெட்டி 1886 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். அப்போது பெண்கள் கல்வி பெறுவதும் மருத்துவம் போன்ற கஷ்டமான துறையில் நுழைவதும் கடினமாக இருந்தாலும், தனது ஊக்கத்தால் மருத்துவக் கல்வியை முடித்தார்.

சமூக பணிகள்

முத்துலட்சுமி ரெட்டி, கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், தொழிலிழந்த பெண்கள் போன்றோருக்காக பல திட்டங்களை உருவாக்கினார். அவைகள் என்ற அமைப்பை நிறுவி, பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அளிக்க முயன்றார். சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், குழந்தைகள் திருமணத்துக்கு எதிரான சட்டங்களை முன்வைத்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் உருவாக்கப் பெரிதும் துணை புரிந்தார்.

முக்கிய சாதனைகள்:

  • ·        இந்தியாவின் முதல் பெண் மருத்துவ அதிகாரி.
  • ·        தமிழகத்தின் முதல் மகளிர் சட்டமன்ற உறுப்பினர்.
  • ·        சென்னை அரசுச் சுகாதாரத் துறையில் பணியாற்றிய முதல் பெண்.
  • ·        பெண்கள் கல்விக்காகவும், மருத்துவ வசதிக்காகவும் போராடிய சமூக சீர்திருத்தவாதி.

மறைவும் நினைவுகளும்

1968-ஆம் ஆண்டு முத்துலட்சுமி இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் செய்த சாதனைகள் இன்று வரை தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. அவரின் தொண்டுகள் இன்று பெண்கள் முன்னேற்றத்தின் அடித்தளமாக விளங்குகின்றன.

முடிவுரை

இந்தியாவின் சமூக மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் முத்துலட்சுமி, கல்விக்கண் திறந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லா தரப்பிலும் உள்ள பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக என்றும் நினைவில் இருக்கிறார்.

கற்பவை கற்றபின் (பக்க எண்: 86)

1. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

அ) அமைச்சர், நாளை விழாவிற்கு வருகிறார் - கால வழுவமைதி

ஆ) இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால், அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான்.    

  - இட வழுவமைதி

இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் - கால வழுவமைதி

ஈ) செல்வன் இளவேலன், இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனைபுரிந்திருக்கிறார்.

  - பால் வழுவமைதி

2. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

அ) தந்தை, 'மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)

விடை : தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று  சொன்னார்.

ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது, அம்மா வழியனுப்பியது.

(வழுவை வழாநிலையாக மாற்றுக)

விடை : அக்காள் நேற்று வீட்டுக்கு வந்தார். அக்காள் புறப்படும்போது, அம்மா வழியனுப்பினார்.

இ) 'இதோ முடித்துவிடுவேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே கூறினார்.

(வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)

விடை :   "இதோ, முடித்துவிட்டேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே கூறினார்.

ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

(படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)

விடை : நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

விடை:

மொழிபெயர்ப்பு என்பது தனிக்கலை. அதனை யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் என்பவர் எந்த மொழியுடனும் தனிப்பற்றுக் கொள்ளாமல், நடுநிலையில் நின்று மொழிபெயர்க்க வேண்டும். குறிப்பாக அவருக்கு இரண்டு மொழிகளிலும் அதாவது தருமொழி பெறுமொழி ஆகிய இரண்டிலும் புலமை இருத்தல் வேண்டும். இரு மொழிகளின் சமூக, பண்பாட்டுச் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.

அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

அருணாவிற்காக ஓடினாள்

சொல்

அம்மா சொன்னார்

சொன்ன அம்மா

சொல்லிச் சென்றார்

அம்மா சொல்லாதே!

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

புலவருக்குத் தந்தார்

பார்

துளிர் பார்த்தாள்

பார்த்த துளிர்

பார்த்துச் சிரித்தாள்

துளிரே பார்க்காதே

துளிருடன் பார்த்தேன்

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

வந்து பார்த்தது

குழந்தையே வா

குழந்தைக்காக வந்தாள்

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன்          நீங்கினான்

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக

பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக. குறிப்பு: நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்- மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.

நூலின் மையப் பொருள்:

        இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்

வெளிப்படும் கருத்து:

 மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

சிறப்புக் கூறு:

      பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:  தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன்

மொழியோடு விளையாடு:

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.

தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்.    நான் யார்?

விடை : காகம்

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ----- யாவும், அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ---- நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்)

விடை : புதையல், புதைத்தல்

2. காட்டு விலங்குகளைச்----தடை செய்யப்பட்டுள்ளது உதவுகிறது. செய்த தவறுகளைச்----            திருந்த உதவுகிறது.  (சுட்டல், சுடுதல்).

விடை : சுடுதல், கட்டல்

3. காற்றின் மெல்லிய ----- பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ----பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

விடை : தொடுதல், தொடுத்தல்

4.  பசுமையான----- ஐக் ------ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

விடை:  காட்சி, காணுதல்

5. பொதுவாழ்வில்-----கூடாது. ----- இல் அவரை மிஞ்ச, ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடை : நடித்தல், நடிப்பு

அகராதியில் காண்க.

  • 1.     மன்றல் -  திருமணம்
  • 2.    அடிச்சுவடு -  காலடியின் அடையாளம்
  • 3.    அகராதி - அகரமுதலி
  • 4.    தூவல் -  மழை, இறகு, பேனா, ஓவியம்
  • 5.    மருள் -  மயக்கம், வியப்பு

நிற்க அதற்குத்தக:

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

படிப்போம் பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள்)

1.     Translation - மொழி பெயர்ப்பு

2.    Culture பண்பாடு

3.    Human Resourceமனிதவளம்

4.    Transferமாறுதல்

5.    Multi mediaபல்துறை ஊடகம்

1 கருத்துகள்

கருத்தளித்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை