10.ஆம் வகுப்பு - தமிழ் மனப்பாடப்பாடல்கள்
2025-2026
இயல்-1
அன்னை மொழியே
அன்னை மொழியே!
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே
கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ
வாழ்த்துவமே!
இயல்-1
காலக்கணிதம்
மாற்றம்
எனது மானிடத் தத்துவம்;
மாறும்
உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை
தீமை எவ்வெவை நன்மை
என்ப
தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர்
மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம்
மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர்
கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய்
வார்த்தை உடம்பு தொடாது;
நானே
தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப்
பதுதான் நாட்டின் சட்டம்!
இயல்-3 காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல்
நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல்
முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும்
வழிபடும் பண்பே. -அதிவீரராம பாண்டியர்
இயல்-3 திருக்குறள்
1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
2. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
3.
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
4.
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
5.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இயல்-4 திருவிளையாடற் புராணம்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா
இயல்-5 கம்பராமாயணம்
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி
காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட
மருதம்வீற் றிருக்கு மாதோ.
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதோ ழியாவழ குடையான்.
இயல்-5 திருக்குறள்
1.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்.
2. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
3. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
4. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
5. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது .
இயல்-6 சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும்
அகிலும்
மாசுஅறு முத்தும்
மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு
அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய
நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த
பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல
வீதியும்
இயல்-6 முத்தொள்ளாயிரம்
சேரநாடு
அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
தேம்பாவணி (இயல் 9)
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி