10 TH STD TAMIL PADIVAM NIRAPPUTHAL PAYIRCHI VINAAKKAL

 




பத்தாம் வகுப்பு – தமிழ்

படிவம் நிரப்புதல் பயிற்சி வினாக்கள் (வினா எண்:41)

1. 22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.

2. கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

  தந்தை பெயர்: பிறைசூடன், மாணவர் பெயர்: செந்தூரன், முகவரி: 32 தேர் வீதி, எழில் நகர், மதுரை-1. சேர விரும்பும் விளையாட்டு: சிலம்பாட்டம்.

3. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் 12 வேலவன் தெரு, சுவாமிமலையில் வசித்து வருகிறார். தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி சுவாமிமலை பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார். அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

4. மதிவதனியின் தந்தை பொற்கோ தனது மகளை தமிழாய்வுக்கூடம் ஒன்றில் தமிழ் தட்டச்சர் பணிக்காகச் சேர்க்க உள்ளார். அவருக்கு தன்விவரப் படிவத்தை நிரப்பித் தருக

5. பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன், அரக்கோணம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச் செல்ல உள்ளார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக.

6. விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

7. 15, கோயில் தெரு, நெசவாளர் நகர், நாமக்கல்- 2 என்ற முகவரியில் வசிக்கும் இளங்கோவன் என்பவரின் மகள் எழில்மங்கை, அரசு உயர்நிலைப்பள்ளி, நெசவாளர் நகர், நாமக்கல் மாவட்டத்தில் 10. ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11.ஆம் வகுப்பு, அறிவியல் பாடப்பிரிவு, தமிழ் வ்ழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை எழில்மங்கையாகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

8. .நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு, வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.

நிரப்பப்பட்ட மாதிரி படிவங்கள்

1. விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

நூலக உறுப்பினர்  படிவம்

விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் விழுப்புரம்

 

உறுப்பினர் சேர்க்கை அட்டை

 

அட்டை எண்:   12345                                                             உறுப்பினர் எண்: 6789410                                     

1.   பெயர்                                              :         . அமுதன்

2.  தந்தை பெயர்                                  :         வளவன்

3.  பிறந்த நாள்                                     :         XX – XX - XXXX

4.  வயது                                               :         15

5.  படிப்பு                                              :         பத்தாம் வகுப்பு

6.  தொலைபேசி / அலைபேசி எண்     :         XXXX XXXX12

7.  முகவரி                                           :         32 கபிலன் தெரு,

                                                                      பெரியார் நகர்,

                                                                      விழுப்புரம் மாவட்டம்.

     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

           

              நான் மைய நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை

ரூ. 100 சந்தா தொகை ரூ. 20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்: விழுப்புரம்

நாள்20-03-2026                                                                                                                                   

                                                                                                    தங்கள் உண்மையுள்ள

              . அமுதன்

திரு / திருமதி / செல்வி / செல்வன் . அமுதன் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

                       அ அ அ

                                                                                              பிணையாளர் கையொப்பம்                                        

அலுவலக முத்திரை                                                    

(பதவி மற்றும் அலுவலகம்)

 

2. .நல்லமலை என்பவரது மகன் அன்புச்செல்வன் 80, வேந்தர் தெரு, வடக்கு வீதி, சிதம்பரம்-1 என்ற முகவரியில் வசித்து வருகிறார். 10,ஆம் வகுப்பில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றுள்ள அவர் அதேபகுதியில் உள்ள அரசினர் மேனிலைப் பள்ளியில் ,வணிகவியல் பாடப்பிரிவில் பதினோராம் வகுப்பு சேர விரும்புகிறார். அவருக்கு சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவுக.

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்

சேர்க்கை எண்: 12345       நாள்: 20-03-2026       வகுப்பும் பிரிவும்: 11.ஆம் வகுப்பு, “பிரிவு

    

1.   மாணவரின் பெயர்                                        :       . அன்புச்செல்வன்

2.  பிறந்த நாள்                                                 :       XX – XX - XXXX

3.  தேசிய இனம்                                               :       இந்தியன்

4.  பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                    :       . நல்லமலை

5.  வீட்டு முகவரி                                              :      80, வேந்தர் தெரு, வடக்கு வீதி,சிதம்பரம்-1

6.  இறுதியாகப் படித்த வகுப்பு                            :       பத்தாம் வகுப்பு

7.  பயின்ற மொழி                                             :       தமிழ், ஆங்கிலம்

8.  இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி         :       அரசினர் மேனிலைப் பள்ளி, சிதம்பரம்-1

9.  பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்       :       490/500

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

தமிழ்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

ஆங்கிலம்

90

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

கணிதம்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

அறிவியல்

100

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

6789410 (2025-2026)

சமூக அறிவியல்

100

 

 

மொத்தம்

490

9.  மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?        :    ஆம்

10. தாய்மொழி                                                           :    தமிழ்

11.  சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்      :    வணிகவியல் - தமிழ்

. அன்புச்செல்வன்

மாணவர் கையெழுத்து

3. 22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1 என்ற முகவரியில் வசித்து வரும் தமிழ்க்கோவின் மகள் கந்திற்பாவை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வளைகோல் பந்தாட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் கந்திற்பாவையாக எண்ணி உரிய படிவத்தை நிரப்புக.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 

உறுப்பினர் சேர்க்கை   விண்ணப்பப் படிவம்

 

1.   மாணவரின் பெயர்                                        :       . கந்திற்பாவை

2.  பாலினம்                                                      :       பெண்

3.  பிறந்த நாள்                                                  :       XX – XX - XXXX

4.  தேசிய இனம்                                               :       இந்தியன்

5.  இரத்த வகை                                                :       +

6.  உயரம் மற்றும் எடை                                    :       150 செ.மீ & 50 கி.கி

7.  பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                    :       தமிழ்க்கோ

8.  வீட்டு முகவரி                                              :       22 , பாரதியார் தெரு, காஞ்சிபுரம்-1

9.  தொலைபேசி / அலைபேசி எண்                 :       XXXX XXXX12

10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு              :       பத்தாம் வகுப்பு

11.  பள்ளியின் முகவரி                                       :        அரசு மேனிலைப்பள்ளி, காஞ்சிபுரம்

12. சேர விரும்பும் விளையாட்டு                        :       வளைகோல் பந்தாட்டம்

                  . கந்திற்பாவை                                      

                                                                                                மாணவரின் கையெழுத்து

                                                                                                 தமிழ்க்கோ

பெற்றோர்/பாதுகாவலர் கையெழுத்து

இடம்: காஞ்சிபுரம்

நாள்: 20-03-2026

4. எழில்குமரனின் மகன் தமிழ்மேகன் 12 வேலவன் தெரு, சுவாமிமலையில் வசித்து வருகிறார். தகவல் உள்ளீட்டாளர் பணிவாய்ப்பு வேண்டி சுவாமிமலை பகுதியிலுள்ள துணியகம் ஒன்றில் விண்ணப்பிக்க விரும்புகிறார். அவருக்கு தன்விவரப்பட்டியல்  நிரப்பி உதவுக.

தன்விவரப் பட்டியல்

1.   பெயர்                                                           :       . தமிழ்மேகன்

2.  பாலினம்                                                      :       ஆண்

3.  பிறந்த நாள் மற்றும் வயது                             :       XX – XX – XXXX  & 19

4.  தேசிய இனம்                                               :       இந்தியன்

5.  பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                    :       எழில்குமரன்

6.  வீட்டு முகவரி                                              :        12, வேலவன் தெரு, சுவாமிமலை

7.  தொலைபேசி / அலைபேசி எண்                 :       XXXX XXXX12

8.  பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்       :       499/500

9.  தாய்மொழி                                                   :       தமிழ்

10. பயின்ற மொழிகள்                                       :       தமிழ், ஆங்கிலம்

11.  தட்டச்சு                                                       :       இளநிலை, முதுநிலை (தமிழ்&ஆங்கிலம்)

12. கணினி                                                        :       பட்டயம்

      மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் தகவல் உள்ளீட்டாளர் பணியினைத் தந்தால் என் பணியைச் சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.

                                                                                                                  இப்படிக்கு,

                                                                                                        தங்கள் உண்மையுள்ள

                                                                                                               . தமிழ்மேகன்

DOWNLOAD PDF


2 கருத்துகள்

கருத்தளித்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை