நூல் மதிப்புரை எழுதுதல் - கட்டுரை
பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/
கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக குறிப்பு:நூல் தலைப்பு- நூலின் மையப் பொருள்-
மொழி நடை-வெளிப்படும் கருத்து-நூல் கட்டமைப்பு- சிறப்புக் கூறு- நூலாசிரியர்.
நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்
அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா?
என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக
அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம்
கலாம்” என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.
நூலின் மையப் பொருள்:
இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள்,
கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய
வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்”
வெளிப்படும் கருத்து:
மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை,
இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப்
பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ்
பெற்றார் என்பதே உண்மை.
நூல் கட்டமைப்பு:
நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை
கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை
மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம்
கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள்,
வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி
சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார்.
முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.
சிறப்புக் கூறு:
பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும்.
தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.
நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர். இரா.மோகன்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி