10.ஆம் வகுப்பு- தமிழ் மிக மெல்லக் கற்போர் வினாவங்கி

 

10.ஆம் வகுப்பு- தமிழ்

மிக மெல்லக் கற்போருக்கான வினாவங்கி

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)

1) 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2) மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை

4) உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

5) தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

6) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

       தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

            தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

             ஓதி யுனர்ந்தின் புருவோமே

7) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

        (குவியல், குலை, மந்தை, கட்டு)   கல், புல், பழம், ஆடு

8) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

9. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

      சொற்கள் -ஆடு, கல், புல், பழம்

10. செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ் எண்ணில் எழுதுக.

. நாற்றிசையும் செல்லாத நாடில்லை  . எறும்புந்தன் கையால் எண் சாண்

. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி  . ஐந்து சால்பு ஊன்றிய தூண்

. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி ஊ. ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

11) 'நமக்கு உயிர் காற்று

    காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

    வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

12. வசன கவிதை – குறிப்பு வரைக

13) பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் ஊஊரும் ஆறுதல் சொற்களை எழுதுக

14. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:

முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

 

பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

 

இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை.

 

நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.

 

ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

 

15. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

16. ' எழுது என்றாள் ' என்பது விரைவு காரணமாக' எழுது எழுது என்றாள் ' என

அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

17. 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

18.  இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-

  சிலை சீலை , தொடு தோடு, மடு மாடு,  மலை மாலை, வளி வாளி, விடு - வீடு

19. பழமொழியை நிறைவு செய்க:-

  1. உப்பில்லாப் --- 2. ஒரு பானை---- 3. உப்பிட்டவரை---- 4. விருந்தும்---- 5. அளவுக்கு           

20. 'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில் நச்சப் படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.

21. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக

     எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

21. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

23. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை ஆ) கொடு - கோடு இ) கொள் - கோள் ஈ) சிறு - சீறு  ) தான் - தாம் ஊ) விதி - வீதி

24. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-    குறிப்புஎதிர்மறையான சொற்கள்

   மீளாத் துயர் , கொடுத்துச் சிவந்த, மறைத்துக் காட்டு, அருகில் அமர்க, பெரியவரின் அமைதி, புயலுக்குப் பின்

25 செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

26. இந்த அறை இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டா லும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

27.” கலைஞர் , பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

28. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 

29. 'கரப்பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக.

30. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

32. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்  யாவர்?

33. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

34. வறுமையிலும் படிப்பின்மீது நா ட்டம்  கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

35. புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

36. பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு

தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

37) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-     


1.     புதுக்கோட்டை

2.    திருச்சிராப்பள்ளி

3.    உதகமண்டலம்

4.    மயிலாப்பூர்

5.    கோயம்புத்தூர்

6.    நாகப்பட்டினம்

7.    புதுச்சேரி

8.    சைதாப்பேட்டை

9.    கும்பகோணம்

10.   திருநெல்வேலி

11.   மன்னார்குடி

12.  தஞ்சாவூர்


38. குறிப்பு வரைக:- அவையம்

39. காலக்கழுதை கட்டெறும்பானதும்  கவிஞர் செய்வது யாது?

40. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

41. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

42. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

  பண்பும் பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

43) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

 மூன்று மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 29 முதல் 37 வரை)

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

2. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளதுஇதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

3. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

                இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

4. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க .

5. 'கண்ணே கண்ணுறங்கு!

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' -இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

6. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?                                                      7. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

8. தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள்  நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

9. முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

10. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

11. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

12. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

13. அலகிட்டு வாய்பாடு (மாதிரி)

    தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

    வேளாண்மை என்னும் செருக்கு

15. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

16. தீவக அணியை விளக்குக.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42 வரை

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

2. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக

3. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

4. மெய்க்கீர்த்தி பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக. (வினா எண்: 38)

5. சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும்  ஒப்பிட்டு எழுதுக.

6. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

7. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

8. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக

9. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக

10. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

11.   விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

12.     15, காமராசர் நகர்பெரியார் தெருவிருத்தாசலம் 10 என்ற முகவரியில் வசிக்கும் தமிழ்வேந்தன் என்பவரின் மகள் பூந்தளிர்அரசு உயர்நிலைப்பள்ளிவிருத்தாசலம்கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை பூந்தளிராகக் கருதி. கொடுக்கப்பட்ட மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

13.     12, அழகர் நகர்பெரியார் தெருவிருத்தாசலம்-1 என்ற முகவரியில் வசிக்கும் எழில்மாறன் என்பவரின் மகள் பூம்பாவைஅரசு உயர்நிலைப்பள்ளிவிருத்தாசலம்கடலூர் மாவட்டத்தில் 10.ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், சதுரங்கப்போட்டியில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறார். தேர்வர் தன்னை பூம்பாவையாகக் கருதி. கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை நிரப்புக.

14.      கதவு எண். 25, திலகர் தெருமதுரை வடக்கு – 2 என்ற முகவரியில் வசிக்கும் நலங்கிள்ளியின் மகள் வேல்விழி அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் தகவல் உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்தேர்வர் தன்னை வேல்விழியாகக் கருதி , தன் விவரப் பட்டியலைக்  கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு நிரப்புக.

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 43 முதல் 45 வரை

1. போராட்டக் கலைஞர்பேச்சுக் கலைஞர்நாடகக் கலைஞர்திரைக்கலைஞர்இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக.  

3. அன்னமய்யா  என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க

4. அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்என்னும் சிறுகதையில்  மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக   

5. ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

6. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக

 பதிவிறக்க

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை