10.ஆம் வகுப்பு - தமிழ்
இயல்-1 வினா விடைகள்
ஒருமதிப்பெண் வினா விடைகள் (வினா
எண் 1 முதல் 11)
1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
அ)எந்+தமிழ்+நா ஆ)எந்த+தமிழ்+நா இ)எம்+தமிழ்+நா
ஈ)எந்தம்+தமிழ்+நா
2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ)இலையும் சருகும்
ஆ)தோகையும் சண்டும்
இ)தாளும் ஓலையும்
ஈ)சருகும் சண்டும்
3) வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக்குறிக்கும்காய்வகை….
அ)குலைவகை ஆ)மணிவகை இ)கொழுந்துவகை ஈ)இலைவகை
4) கேட்டவர்மகிழப்பாடியபாடல்
இத்தொடரில்இடம்பெற்றதொழிற்பெயரும்,வினையாலணையும் பெயரும்முறையே
அ)
பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ) கேட்டவர்;பாடிய ஈ) பாடல்;கேட்டவர்
5) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட
மன்னன்
அ)பாண்டியன் ஆ)சேரன் இ)சோழன் ஈ)பல்லவன்
6) சாகும்போதும் தமிழ்படித்துச்
சாகவேண்டும் என்று கூறியவர்……
அ)பாரதியார் ஆ)ஜி.யு.போப் இ)க.சச்சிதானந்தன் ஈ)பாவலரேறு
7) பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்
இயற்பெயர்
அ) துரை.செந்தில் ஆ) துரை.வேலு இ) துரை.செல்வம் ஈ)துரை.மாணிக்கம்
8) தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த பெருஞ்சித்திரனாரின்
நூல்
அ) திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆ) கனிச்சாறு இ) பாவியக்கொத்து
ஈ) மகபுகுவஞ்சி
9) எள்ளிலிருந்து எண்ணெய்
எடுத்தலின் மிஞ்சுவதைக்குறிக்கும் சரியான சொல்
அ) எள் கசடு ஆ) பிண்ணாக்கு இ) ஆமணக்கு ஈ) எள்கட்டி
10) வெஃஃகுவார்க்கில்லை,
உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை , சொல்லிசை அளபெடை ஆ)இன்னிசை
அளபெடை , சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை ஈ) ஒற்றளபெடை
, இன்னிசை அளபெடை
11.
"மெத்த வணிகலன்" என்னும் தொடரில்
தமிழழகனார் குறிப்பிடுவது -
அ)
வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஆ) பெரும்
வணிகமும் பெரும் கலன்களும்
இ)
ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிகக்
கப்பல்களும் அணிகலன்களும்
12.
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு
அ) சிங்கப்பூர் ஆ) மலேசியா இ) இந்தியா ஈ) இலங்கை
பாடலைப் படித்து
வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.
"உந்தி
உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
1.
பாடலின்
ஆசிரியர்-
அ)
பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ)
தமிழழகனார்
2.
பண்புத்தொகையைத்
தேர்ந்தெடுக்க.
அ)
செந்தாமரை ஆ) வீசுதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
3.
தும்பி
என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ) உந்தி இ) யாண்டும் ஈ)
வண்டு
4.
பாடல்
இடம்பெற்றுள்ள நூல் -
அ)
உலகியல் நூறு
ஆ) பாவியக் கொத்து இ)
கனிச்சாறு ஈ) எண்சுவை
"முத்தமிழ்
துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு."
1.
பாடல்
இடம்பெற்ற நூல் -
அ)
நற்றிணை ஆ) முல்லைப்பாட்டு இ) குறுந்தொகை ஈ)
தனிப்பாடல் திரட்டு
2.
பாடலில்
இடம்பெற்றுள்ள அணி
அ)
இரட்டுற மொழிதல் அணி ஆ) தீவக அணி இ) வஞ்சப்
புகழ்ச்சி அணி
ஈ) நிரல் நிறை அணி
3.
தமிழுக்கு
இணையாகப் பாடலில் ஒத்திருப்பது
அ) சங்கப்
பலகை ஆ) கடல் இ) அணிகலன் ஈ) புலவர்கள்
4.
பாடலின்
ஆசிரியர்
அ)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆ) நப்பூதனார் இ) சந்தக்கவிமணி தமிழழகனார்
ஈ) பெருங்கௌசிகனார்
இரண்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)
1. 'வேங்கை' என்பதைத்
தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
விடை:
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி
ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது (
பொதுமொழி)
2)
விடை: சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி
3)
ஒரு
தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு
வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன.
மேற்கண்ட
தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய
பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
விடை:
சரியான
தொடர்கள்:
*
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
* ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழை:
தாற்றின்
தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.
4)
உடுப்பதூஉம்
உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும்
கீழ் – இக்குறளில்
அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன்
இலக்கணம் தருக.
விடை:
இன்னிசையளபெடை
– ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது.
5)
தற்கால
உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக
விடை: காலையிலேயே மாலையும்
வந்து விட்டது.( மாலை
பொழுதையும், பூவையும்
குறித்தது)
5) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத்
திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
விடை:
“தேனிலே ஊறிய செந்தமிழின் –
சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே
6) கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
(குவியல், குலை, மந்தை, கட்டு) கல், புல், பழம், ஆடு
விடை:
கற்குவியல்,பழக்குலை,ஆட்டுமந்தை,புற்கட்டு
7) சொற்களை இணைத்துப்
புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)
விடை:
தேன்மழை,மணிமேகலை,வான்மழை,பொன்மணி
,பூவிலங்கு
8. கீழ்க்காணும் சொற்களின்
கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
சொற்கள் -ஆடு, கல், புல், பழம்
விடை:
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
கற்குவியல் |
புல் |
புற்கட்டு |
பழம் |
பழக்குலை |
ஆடு |
ஆட்டுமந்தை |
9. செய்யுள் அடிகளில்
இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ் எண்ணில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும்
செல்லாத நாடில்லை |
நான்கு |
ச’ |
எறும்புந்தன்
கையால் எண் சாண் |
எட்டு |
அ |
ஐந்து
சால்பு ஊன்றிய தூண் |
ஐந்து |
ரு |
நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி |
நான்கு,இரண்டு |
ச’ , உ |
ஆனை
ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
ஆயிரம் |
க000 |
10. வினைமுற்றை
வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைக்க.
1.கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து
வாருங்கள்.
விடை:
கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2.
ஊட்டமிகு
உணவு உண்டார்.அவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
விடை:
ஊட்டமிகு
உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3.
நேற்று
என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.
விடை:
நேற்று
என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
4.பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில்
வென்றார்.
விடை:
பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
11. குறிப்புகளைக் கொண்டு
வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத் தொடர்கள் அமைக்க.
(குறளின்பம்,
சுவைக்காத
இளநீர்,
காப்பியச்
சுவை,
மனிதகுல
மேன்மை,
விடுமுறைநாள்)
குறளின்பம் |
குறளின்பத்தை
அறியாதவர் உண்டோ? |
சுவைக்காத
இளநீர் |
உழவன்
சுவைக்காத இளநீர் உண்டா? |
காப்பியச்
சுவை |
சிலப்பதிகார
காப்பியச் சுவைக்கு ஈடு உண்டா? |
மனிதகுல
மேன்மை |
விருந்தோம்பல்
மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு அல்லவா? |
விடுமுறைநாள் |
சனிக்கிழமை
பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா? |
12.
கலைச்சொல் அறிதல்
1.
Vowel
- உயிரெழுத்து
2.
Consonant
– மெய்யெழுத்து
3.
Homograph
– ஒப்பெழுத்து
4.
Monolingual
– ஒரு
மொழி
5.
Conversation
- உரையாடல்
6.
Discussion
– கலந்துரையாடல்
13. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன்
சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.
விடை:
ü தேன் குடி
ü நூல் படி
ü பை எடு
ü மலர் கொய்
ü வா போகலாம்
14. வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத்
தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
விடை:
ü காண்+சி=காட்சி
ü சிரி+பு
= சிரிப்பு
ü படி+தல்=படித்தல்
ü தடு+தல்=தடுத்தல்
15. தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சிறுகூலங்கள்
சிலவற்றை எழுதுக.
விடை: வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி
முதலியசிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.
மூன்று மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 29 முதல் 37 வரை)
1)தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
விடை:
ü பழமையான நறுங்கனி
ü பாண்டியன் மகள்
ü சிறந்த நூல்களை உடைய
மொழி
ü பழம்பெருமையும் தனிச்சிறப்பும்
உடைய மொழி
2) ’புளியங்கன்று ஆழமாக
நடப்பட்டுள்ளது. இதுபோல் இளம் பயிர்
வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
விடை
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன்.
ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்
இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது
ஈ)
வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.
உ)
பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.
3)
'அறிந்தது, அறியாதது, புரிந்தது,
புரியாதது, தெரிந்தது, தெரியாதது,
பிறந்தது, பிறவாதது' இவை
அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத்
தெரியும்.
இக்கூற்றில் வண்ண
எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
விடை: அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை ,
பிறத்தல்-பிறவாமை.
4)
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
விடை:
|
தமிழ் |
கடல் |
1 |
முத்தமிழாக
வளர்ந்தது |
முத்தினைத்
தருகிறது. |
2 |
முச்சங்கங்களால்
வளர்க்கப்பட்டது |
முச்சங்கினைத்
தருகிறது. |
3 |
ஐம்பெருங்காப்பியங்கள்-
அணிகலன்கள் |
கடலில்
செல்லும் கப்பல்கள் |
4 |
சங்கப்புலவர்களால்
காக்கப்பட்டது. |
சங்கினைக்
காக்கிறது |
ஐந்து மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 38 முதல் 42 வரை)
1) மனோன்மணீயம் சுந்தரனாரின்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும்
ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
மனோன்மணியம்
சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:
ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.
ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும்
உள்ளது.
ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.
ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம்.
பெருஞ்சித்திரனாரின்
வாழ்த்துப்பாடல்:
ü அழகான
அன்னை மொழி
ü பழமையான
நறுங்கனி
ü பாண்டியன்
மகள்
ü சிறந்த
நூல்களை உடைய மொழி
ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.
2)காட்சியைக்கண்டு கவினுற
எழுதுக
சிந்திக்கத்
தூண்டும் காட்சி! சிந்தையில்
நின்ற காட்சி! எதிர்காலத்தேவை
இக்காட்சி! உண்மையை
உணர்த்தும் காட்சி! மனதில்
வைத்தால் நமக்கு நன்மையை
அளிக்கும் காட்சி! என்
கவிதைக்கு இரையான காட்சி! |
|
3) மொழி பெயர்ப்பு:
1.If
you talk to a man in a language he understand,thats goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mendela
விடை
: ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு
மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே
அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா
2.
Language is the road map of a culture. It tells you where its people come from
and where they are going – Rita Mae Brown
விடை:
மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி,
அதுவே
அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள்,
எங்கே
செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா
மேக் ப்ரெளன்
4)
நிற்க அதற்குத்தக
இன்சொல்
பேசுதல்
1. நான்
செல்லும் வழி இன்சொல் வழி.
2. என்
நண்பர்களை
இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன்.
3. தீய
செயலில் ஈடுபட விடமாட்டேன்
4. பிறர்
மனம் மகிழும்படி நடப்பேன்
5. பிறருக்கு
நன்மை செய்வேன்
எட்டு மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 43 முதல் 45 வரை)
1) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
தமிழ்ச்சொல் வளம்:
v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.
v திராவிட மொழிகளில் மூத்தது.
v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.
v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.
தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:
v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.
v தொழில்நுட்ப உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.
v மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய
வேண்டும்.
2)
குமரிக் கடல்முனையையும் வேங்கட மலைமுகட்டையும்
எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசா ல் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும்
திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்
தமிழ் பேசி,
சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப்
புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை:
உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர்
என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
முச்சங்கம்:
பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.
சிற்றிலக்கியங்கள்:
96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.
காலந்தோறும் தமிழ்:
சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்
பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.
முடிவுரை:
இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக
வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி